தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

06-05-2019 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?



06-05-2019 நேரம் பிற்பகல் 3:35 மணி அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் வட கடலோர ,வட உள் ,டெல்டா ,வட மற்றும் சில தென் உள் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது .நான் இதற்கு முந்தைய சில பதிவுகளிலும் நேரலையிலும் உங்களிடம் தொடர்ந்து தெரிவித்து வருவது போல பொதுவாக மே மாத காலகட்டத்தில் தான்  கடலோர மாவட்டங்களில் குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலையானது அதிகரிக்க தொடங்கும்.அதனினும் குறிப்பாக #நாகை  ,#திருவாரூர் , #காரைக்கால் , #கடலூர் ,#விழுப்புரம் போன்ற மாவட்ட பகுதிகளின் ஒரு ஆண்டின் ஒரு நாளில் பதிவாகும் அதிகப்பட்ச வெப்பநிலை என்பது மே மற்றும் ஜூன் மாதங்களின் நாட்களிலேயே பதிவாகும்.அடுத்து வரக்கூடிய சில நாட்களில் நாகை , கடலூர் மாவட்டங்களில் கடல் காற்று நிலப்பகுதிக்கு உள்ளே வருவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அடுத்த சில நாட்களில் #மயிலாடுதுறை , #சீர்காழி , #கும்பகோணம் ,#நெய்வேலி  ,#திருவாரூர் , #சிதம்பரம் , #பண்ருட்டி #பெண்ணாடம் ,#உளுந்தூர்பேட்டை ,#விழுப்புரம்  ,#திருக்கோவிலூர் ,#செஞ்சி , #விருத்தாச்சலம் , #திண்டிவனம் உட்பட கடலோர மாவட்டங்களின்  கடலோர பகுதிகளில் இருந்து சற்று உள்ளே அமைந்திருக்க கூடிய பகுதிகளில் ஆங்காங்கே பகல் நேர வெப்பநிலையானது மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது .இவைதவிர்த்து வந்தவாசி ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,ஜெயம்கொண்டம் ,அரியலூர் ,பெரம்பலூர் ,திருச்சி , தஞ்சாவூர் ,புதுக்கோட்டை , கீரனூர் , மணப்பாறை , அருப்புக்கோட்டை ,சாத்தூர் , சிவகாசி , விருதுநகர் ,,திருவண்ணாமலை , #வேலூர் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் பகல் நேர வெப்பநிலையானது அடுத்து வரக்கூடிய நாட்களில் அதிகரித்து பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அணைத்து நகரங்களின் பெயர்களையும் ஒரே பதிவில் குறிப்பிடுவது கடினம் ஆகையால் நினைவுக்கு வந்த சில முக்கிய பகுதிகளை மட்டும் மேலே குறிப்பிட்டு உள்ளேன்.உங்கள் பகுதியின் நிலையை அறிய விருப்பினால் ஊரின் பெயரை இணைத்து Comment செய்யுங்கள் நான் பதில் வழங்குகிறேன்.அதேபோல கடலோர பகுதிகளில் இதற்கு முந்தைய காலங்களை ஒப்பிடுகையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் பகல் நேர வெப்பநிலையானது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது .ஒவ்வொரு நாளும் பகல் நேர வெப்பநிலையில் ஏற்பட இருக்கும் மாறுதல்கள் தொடர்பாக அதாவது எந்தெந்த பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை கடந்த நாளுடன் ஒப்பிடுகையில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்பதைபோன்ற தகவல்களை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.

வெப்பசலன மழையை பொறுத்தவரையில் நான் கடந்த பதிவில் தெரிவித்து இருந்தது போல 07-05-2019 ஆகிய நாளை முதல் தமிழிகக்தில் பதிவாகி வரும் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக 07-05-2019 ஆகிய நாளை மற்றும் 08-05-2019 ஆகிய நாளை மறுநாள் உட்பட அடுத்த சில நாட்களுக்கு வட உள் ,வட மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே பிற்பகலுக்கு பிறகு அதாவது மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ளது இவை தவிர்த்து காற்றின் திசையில் ஏற்படும் மாறுதல்களை பொறுத்து சில உள் மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் மழை பதிவாகலாம்.மழை பதிவாக வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பாக அன்றன்றைக்கு நமது பக்கத்தில் பதிவிடுகிறேன் மேலும் நிகழ் நேரத்திலும் ஓரிரு முறை பதிவிட முயற்சிக்கிறேன்.






பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...