தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

07-05-2019 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ள பகுதிகள் 07-05-2019 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ள பகுதிகள்

07-05-2019 நேரம் பிற்பகல் 1:55 மணி நான் கடந்த பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது போல 07-05-2019 ஆகிய இன்று கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பதிவாக இருக்கும் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.இன்று  தமிழக வட ,வட உள் ,தென் உள் ,மேற்கு உள் ,வட மேற்கு மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காகே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.07-05-2019 ஆகிய இன்று நான் முன்பு குறிப்பிட்டு இருந்தது போல இன்று வட உள் மாவட்டங்களிலும் மேற்கு உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் சற்று பரவலான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக #கிருஷ்ணகிரி , #தர்மபுரி  , #சேலம் ,#நாமக்கல் ,#கரூர் மற்றும் #ஈரோடு மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் குறிப்பாக கோவை மாவட்டம் #வால்பாறை -திண்டுக்கல் மாவட்டம் #கொடைக்கானல் மற்றும் கேரள மாநிலம் #மூணாறு சுற்றுவட்டப் பகுதிகள் மற்றும் அதன் இடையே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே சற்று வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேபோல #நீலகிரி ,#தேனி மற்றும் #விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய சற்று வலுவான மழை பதிவாகலாம்.மேலும் இன்று #திண்டுக்கல் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளிலும் ,மதுரை , சிவகங்கை ,புதுக்கோட்டை ,திருச்சி மாவட்டத்தின் தெற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது . மேலும் இன்று வேலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதிகள் உட்பட வேலூர் மாவட்டத்திலும் #விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் திருவள்ளுர் ,திருவண்ணாமலை ,காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளிலும் இன்று  ஆங்காங்கே ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இவைதவிர்த்து கோவை ,பெரம்பலூர் ,திருப்பூர்  ,தஞ்சை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம்.

07-05-2019 ஆகிய இன்று கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் ஆங்காங்கே வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மைசூரு மற்றும் பெங்களூரு சுற்றுவட்டப் பகுதிகளிலும் ஆங்காங்கே நல்ல மழை பதிவாகலாம்.கேரளாவின் #கல்பேட்டா உட்பட வயநாடு மாவட்டத்திலும் ,கண்ணூர் , கோழிக்கோடு மற்றும் கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள  மற்றும் கோவை மாவட்டத்தை ஒட்டியிருக்கும் கேரள மாநில பகுதிகளிலும் ஆங்காங்கே வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உளள்து.

நிகழ் நேரத்தில் மழை பதிவாகி வரும் பகுதிகளின் தகவல்களுடன் இன்று இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு வெளியிடுகிறேன்.பரவலான மழை பதிவாக தொடங்கியதும் அடுத்த சில மணி நேர வாய்ப்புகள் தொடர்பாகவும் நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...