தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

08-05-2019 தமிழகத்தின் தற்போதைய வானிலை | கடந்த 24 மணி நேரத்தின் மழை அளவுகள்

08-05-2019 நேரம் காலை 9:55 மணி நான் கடந்த 06-05-2019 ஆம் தேதி அன்று பதிவிட்டு இருந்த அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கான வானிலை தகவல்ககளில் குறிப்பிட்டு இருந்தது போல 08-05-2019 ஆகிய இன்று காரைக்கால் , நாகப்பட்டினம் , கடலூர் ,புதுச்சேரி ,சென்னை , திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உட்பட அனைத்து வட கடலோர மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலையானது அதிகரித்து இருக்க வாய்ப்புகள் உள்ளது.மேலும் 08-05-2019 ஆகிய இன்றும் வட உள் ,வட மற்றும் சில உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பாக பிற்பகலில் பதிவிடுகிறேன்.

மேலும் நான் தற்போதைய வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பான தகவல்களை எனது 06-05-2019 ஆம் தேதி வாக்கில் பதிவிட்டு உள்ளேன்.அதில் கடலோர மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் இருந்து சற்று உள்ளே அமைந்திருக்கும் பகுதிகள் தொடர்பாக பதிவிட்டு உள்ளேன்.எந்த மாதிரியான பகுதிகளில் இன்று அதிக வெப்பம் பதிவாக வாய்ப்புகள் உள்ளது என்பதை அறிந்துகொள்ள அந்த பதிவினில் பார்த்துக்கொள்ளுங்கள்.பொதுவாக வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பம் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே இருக்கலாம்.உதாரணமாக ஒரு சில நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மற்றும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளை மட்டும் நான் இங்கே குறிப்பிடுகிறேன் மயிலாடுதுறை , சீர்காழி  , கும்பகோணம் , திருவாரூர் ,நன்னிலம் போன்ற பகுதிகள்

08-05-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதிகமான மழை பதிவான சில பகுதிகளின் நிலவரம்.

#திருக்கோயிலூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 87 மி.மீ
#மாணம்பூண்டி (விழுப்புரம் மாவட்டம் ) - 72 மி.மீ
#மாயனூர் (கரூர் மாவட்டம் ) - 62 மி.மீ
#தல்லாகுளம்  (மதுரை மாவட்டம் ) - 61 மி.மீ 
#மதுரை தெற்கு (மதுரை மாவட்டம் ) - 58 மி.மீ
#வேங்கூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 48 மி.மீ 
#காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 46 மி.மீ
#தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம் ) - 43 மி.மீ
#பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம் ) - 42 மி.மீ
#திருமங்கலம் (மதுரை மாவட்டம் ) - 40 மி.மீ
#மயிலம் AWS (விழுப்புரம் மாவட்டம் ) - 37 மி.மீ
#பலவிடுதி  (கரூர் மாவட்டம் ) - 35 மி.மீ
#பாப்பிரெட்டிபட்டி ARG(தர்மபுரி மாவட்டம் ) - 34 மி.மீ
#நெய்வேலி AWS (கடலூர் மாவட்டம் ) - 29 மி.மீ
#விருத்தாச்சலம் (கடலூர் மாவட்டம் ) - 28 மி.மீ
#ஓசூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 28 மி.மீ
#ஆற்காடு (வேலூர் மாவட்டம் ) - 27 மி.மீ
#திருப்பழப்பந்தல் (விழுப்புரம் மாவட்டம் ) - 26 மி.மீ 
#தர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 25 மி.மீ
#சுலாங்குறிச்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 24 மி.மீ 
#தணியமங்கலம்  (மதுரை மாவட்டம் ) - 23 மி.மீ 
#கீழ்ப்பாடி (விழுப்புரம் மாவட்டம் ) - 22 மி.மீ
#கோடநாடு (நீலகிரி மாவட்டம் ) - 22 மி.மீ
#கருமந்துறை ARG(சேலம் மாவட்டம் ) - 22 மி.மீ
#நாவலூர் கோட்டுப்பட்டு (திருச்சி மாவட்டம் ) - 20 மி.மீ
#பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம் ) - 20 மி.மீ
#செம்மேடு (விழுப்புரம் மாவட்டம் ) - 19 மி.மீ
#பாலக்கோடு ARG(தர்மபுரி மாவட்டம் ) - 18 மி.மீ
#முகையூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 18 மி.மீ
#ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#மோகனூர் (நாமக்கல் மாவட்டம் ) - 16 மி.மீ
#தளி  (கிருஷ்னகிரி மாவட்டம் )-15 மி.மீ 
#விரகனூர்  (மதுரை மாவட்டம் ) - 15 மி.மீ
#கிருஷ்ணராயபுரம்  (கரூர் மாவட்டம் ) - 14 மி.மீ 
#செஞ்சி (விழுப்புரம் மாவட்டம் ) -14 மி.மீ 
#தியாகதுர்கம் (விழுப்புரம் மாவட்டம் ) - 12 மி.மீ
#ஆனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 10 மி.மீ
#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 9 மி.மீ


இங்கே நான் குறிப்பிட்டு இருக்கும் பகுதிகள் தவிர்த்து மேலும் சில இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது அது தொடர்பான தகவல்களுடனும் 10 மி.மீ க்கும் குறைவாக அளவு மழை பதிவாகிய பல பகுதிகளின் மழை அளவுகளுடனும் இன்னும் சற்று நேரத்தில் நமது Youtube Channel இல் குரல் பதிவு செய்கிறேன்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...