தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

08-05-2019 நேரம் பிற்பகல் 2:00 மணி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் இன்றைய வானிலை எப்படி இருக்கலாம் ?

08-05-2019 நேரம் பிற்பகல் 2:00 மணி நான் காலையில் எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல இன்றும் தமிழக வட உள் மற்றும் வட மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.08-05-2019 ஆகிய இன்றும் திருவண்ணாமலை ,விழுப்புரம் , காஞ்சிபுரம் ,வேலூர் ,திருவள்ளூர் ,கடலூர் ,சேலம் ,அரியலூர் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.கடல் காற்று தாமதமாக உள்ளே வருவதால் இன்றும் விழுப்புரம் மாவட்டத்தில் மழை மேகங்கள் மாலை நேரங்களில் உருவாக வாய்ப்புகள் உள்ளது.கடலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளின் மழைக்கு அதனுடைய நகர்வுகள் மிகவும் முக்கியமானது இவை தவிர்த்து இன்றும் திண்டுக்கல் மற்றும் கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேபோல இன்றும் சென்னை மாநகரின் தெற்கு புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இவைதவிர்த்து காற்றின் திசையை பொறுத்து ஆங்காங்கே ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.ராடாரில் மழை மேகங்கள் ஓரளவு பதிவாக தொடங்கியவுடன் நிகழ் நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.மேலும் ஓரிரு முறை நமது பக்கத்தில் பதிவிடவும் முயற்சிக்கிறேன்.பொதுவாக நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பதிவாக வாய்ப்புகள் குறைவு.

08-05-2019 ஆகிய இன்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேபோல #கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள #கேரள மாநில வடக்கு மற்றும் வட கடலோர பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.பெங்களூரு மற்றும் மைசூரு சுற்றுவட்டப் பகுதிகளில் இன்றும் ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம்.

நிகழ் நேரத்தில் மழை பதிவாகி வரும் பகுதிகளின் தகவல்களுடனும் மழைக்கான வாய்ப்புகளுடனும் இன்றும் மீண்டும் பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.







பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...