தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

09-05-2019-நேரம் -இரவு -9:30-தற்பொழுது மழை பதிவாகி வரும் பகுதிகள்

09-05-2019 நேரம் இரவு 9:35 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் ராடார் படம் இன்று இரவு 9:20 மணி வாக்கில் பதிவானது அதன்படி கடந்த குரல் பதிவில் தெரிவித்து இருந்தது போல இன்னும் சற்று நேரத்தில் #பெரம்பலூர் அருகே உள்ள பகுதிகளில் மழை பதிவாக தொடங்கலாம் மேலும் நான் பிற்பகலில் எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல அடுத்த சில நிமிடங்களில் #திருச்சி மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் அதாவது #துறையூர் வட்டப் பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது தற்சமயம் #பெரம்பலூர் மாவட்டம் #பசம்பலுர் ,#தொழுதூர் #கடலூர் மாவட்ட மேற்கு பகுதியான #திட்டக்குடி #விழுப்புரம் மாவட்ட மேற்கு பகுதிகளான #சின்னசேலம்  , #கீழஓரத்தூர் ,சேலம் மாவட்டம் #தலைவாசல் ,#கங்கவள்ளி மற்றும் #அரும்பாவூர் சுற்றுவட்டப் பகுதிகளில் மிக மிக வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மழை மேகங்கள் இந்த நகர்வினை எடுக்க தொடங்கியவுடன் அதன் வலு எப்படி அதிகரித்துள்ளது என்று நீங்களே பாருங்கள் இது தான் சாதகமான சூழல் தற்பொழுது நான் மேற்குறிப்பிட்ட இருக்கும் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் வலுவான இடியுடன் கூடிய மழை ஆங்காங்கே பதிவாகி வரலாம் மேலும் தற்பொழுது #கொப்பம்பட்டி  ,#பாலகிருஷ்ணம்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளிலும் #நாமக்கல் மாவட்டம் #செம்மேடு சுற்றுவட்டப் பகுதிகளிலும் வலுவான மழை மேகங்கள் அங்கும் இங்குமாக பதிவாகி வருகின்றனம் மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்த அந்த #தர்மபுரி மாவட்ட மழை மேகங்கள் தற்பொழுது வலு குறைந்து தற்பொழுது #தர்மபுரி  ,அரூர்  #சேலம் மாவட்டம் #கல்ராயன் மலை பகுதிகள் பகுதிகளில் பதிவாகி வருகிறது மேலும் #வாழப்பாடி சுற்றுவட்டப் பகுதிகளிலும் சற்று வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் நாமக்கல் மாவட்டம் #திருச்செங்கோடு சுற்றுவட்டப் பகுதிகளில் இருந்த மழை மேகங்கள் தற்பொழுது வலுகுறைய தொடங்கின.மேலும் #குண்டூர் ,#கீழ்ங்குறிச்சி , #துவாக்குடி உட்பட #திருச்சி மாநகரின் தென் கிழக்கு புறநகர் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் வலு குறைந்த மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

அந்த வலுவான மழை மேகங்கள் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தின் வடக்கு பகுதிகளை நெருங்கியதும் அதன் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக நமது https://www.youtube.com/channel/UC01ZVzepyj5PDywkiZZMqmQ குரல் பதிவு செய்கிறேன்.

அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...