தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

09-05-2019 காலை 11:00 மணி இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்

09-05-2019 நேரம் காலை 10:05 மணி கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று பிற்பகல் மற்றும் அதற்கு பிறகு நாம் எதிர்பார்த்ததைப் போன்று விழுப்புரம் , திருவண்ணாமலை உட்பட வட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலான மழை பதிவானது மேலும் அந்த மழை மேகங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தென் -தென் மேற்கு திசையில் நகர முற்பட்டு பின்னர் பெரம்பலூர் , திருச்சி ,நாமக்கல் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சற்று வலுவான மழை பொழிவை வழங்கியது குறிப்பாக #திருச்சி மாவட்டம் #குணசீலம் அருகே #வாத்தலை அணை (#VATHALAI ANAICUT) பகுதியில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது அதவாது கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் 101 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.அதன் பின்னர் அந்த மழை மேகங்கள் தர்மபுரி மாவட்ட மழை மேகங்கள் உடன் இணைந்து பயணித்து நாமக்கல் ,கரூர் ,திருப்பூர் மாவட்டத்தின் தெற்கு பகுதிகள் ,திண்டுக்கல் மாவட்டத்தின் வட மேற்கு பகுதிகள் ,கோவை மாவட்ட தெற்கு பகுதிகள் என தொடர்ந்து பயணித்து மேற்கு உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பொழிவை ஏற்படுத்தியது.அதன் நகர்வுகள் தொடர்பாக சில மணி நேரங்களுக்கு ஒரு முறை நான் நமது YOUTUBE CHANNEL இல் குரல் பதிவு செய்து வந்தேன்.அந்த மழை மேகங்களின் நகர்வுகள் தொடர்பான ருசிகரமான திருப்பங்களை தெரிந்து கொள்ள https://www.youtube.com/channel/UC01ZVzepyj5PDywkiZZMqmQ

அதிகாலை 00:10 மணி நிலவரம்  - https://www.youtube.com/watch?v=OviNxYz-3Bw

அதிகாலை 2:00 மணி நிலவரம் - https://www.youtube.com/watch?v=RQXbkreeFDc

09-05-2019 ஆகிய இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு ,மேற்கு உள் ,வட உள் ,உள் மற்றும் தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான தகவல்களை இன்று பிற்பகல் வாக்கில் நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.

09-05-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழிகக்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

வாத்தலை அணை - VATHALAI ANAICUT (திருச்சி மாவட்டம் ) - 101 மி.மீ
#முகையூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 82 மி.மீ
#பாடலூர் (பெரம்பலூர் மாவட்டம் ) - 59 மி.மீ
#நந்தியாறு  (திருச்சி மாவட்டம் ) - 58 மி.மீ
#தளுதலை (பெரம்பலூர் மாவட்டம் ) - 48 மி.மீ
#மூலனூர் (திருப்பூர் மாவட்டம் ) - 41 மி.மீ
#விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 40 மி.மீ
#முசிறி  (திருச்சி மாவட்டம் ) - 40 மி.மீ
#திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 40 மி.மீ
#மயிலம் AWS (விழுப்புரம் மாவட்டம் ) - 37 மி.மீ
#சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம் ) -34 மி.மீ
#கெதர்  (விழுப்புரம் மாவட்டம் ) - 33 மி.மீ 
#அரூர் (தர்மபுரி மாவட்டம் ) - 32 மி.மீ
#சமயபுரம்  (திருச்சி மாவட்டம் ) - 31 மி.மீ
கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 30 மி.மீ
#சூரப்பட்டு  (விழுப்புரம் மாவட்டம் ) - 28 மி.மீ
களத்தூர் (பெரம்பலூர் மாவட்டம் ) - 28 மி.மீ
#பூண்டி (திருவள்ளூர் மாவட்டம் ) - 27 மி.மீ
கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம் ) - 27 மி.மீ
செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம் ) - 25 மி.மீ
#கரூர் (கரூர் மாவட்டம் ) - 24 மி.மீ
#குளித்தலை  (கரூர் மாவட்டம் ) - 23 மி.மீ
வளத்தி  (விழுப்புரம் மாவட்டம் ) - 22 மி.மீ
விரகவூர்  (விழுப்புரம் மாவட்டம் ) - 21 மி.மீ
#கோழியனுர்  (விழுப்புரம் மாவட்டம் ) - 20 மி.மீ
தேவிமங்கலம்  (திருச்சி மாவட்டம் ) - 20 மி.மீ
#அரவாக்குறிச்சி  (கரூர் மாவட்டம் ) - 20 மி.மீ
#உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம் ) - 20 மி.மீ
அவலூர்பேட்டை  (விழுப்புரம் மாவட்டம் ) - 20 மி.மீ
துறையூர்  (திருச்சி மாவட்டம் ) - 19 மி.மீ
#மயிலம்பட்டி  (கரூர் மாவட்டம் ) - 19 மி.மீ
சுலாங்குறிச்சி  (விழுப்புரம் மாவட்டம் ) - 18 மி.மீ
ஏரையூர்  (விழுப்புரம் மாவட்டம் ) - 17 மி.மீ
#வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம் ) -17 மி.மீ
செம்மேடு  (விழுப்புரம் மாவட்டம் ) - 17 மி.மீ
#மாயனுர்  (கரூர் மாவட்டம் ) - 17 மி.மீ
கிருஷ்னராயபுரம்  (கரூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#தாராபுரம் (திருப்பூர் மாவட்டம் ) - 17 மி.மீ
#தம்மாமட்டி (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ
#ரிஷிவந்தியம்  (விழுப்புரம் மாவட்டம் ) - 16 மி.மீ 
பிள்ளையார்குப்பம் (விழுப்புரம் மாவட்டம் ) - 15 மி.மீ
#உளுந்தூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 15 மி.மீ
பிள்ளையார்குப்பம்  (விழுப்புரம் மாவட்டம் ) - 15 மி.மீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர் மாவட்டம் ) - 15 மி.மீ
#திருச்சி நகரம்  (திருச்சி மாவட்டம் ) - 15 மி.மீ
#தியாகதுர்கம்  (விழுப்புரம் மாவட்டம் ) - 13 மி.மீ
அணைப்பாளையம்  (கரூர் மாவட்டம் ) - 13 மி.மீ
#பவானி (ஈரோடு மாவட்டம் ) -13 மி.மீ
#உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 12 மி.மீ
தென்பறநாடு  (திருச்சி மாவட்டம் ) - 12 மி.மீ
#நெடுங்கள் (கிருஷ்னகிரி மாவட்டம் ) -12 மி.மீ
#லால்குடி (திருச்சி மாவட்டம் ) - 11 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம் ) - 10 மி.மீ
மதுராந்தகம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 10 மி.மீ
புலிவலம்  (திருச்சி மாவட்டம் ) - 10 மி.மீ
குப்பம்பட்டி  (திருச்சி மாவட்டம் ) - 10 மி.மீ
தட்டையங்கார்பேட்டை  (திருச்சி மாவட்டம் ) - 10 மி.மீ
#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ


 இனைத்தவிர்த்து சில இடங்களிலும் 10 மி.மீ க்கும் குறைவாக பல இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.அனைத்து பகுதிகளின் பெயர்களையும் இங்கு குறிப்பிடுவது கடினம்.உங்களது ஊரின் மழை அளவை அறிய விரும்பினால் ஊரின் பெயரை comment செய்யுங்கள்.நான் பார்க்கையில் பதில் வழங்குகிறேன்.

அணைத்து பகுதிகளின் தகவல்களுடன் இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...