தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

09-05-2019 இன்று அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ள பகுதிகள்

09-05-2019 நேரம் பிற்பகல் 2:05 மணி நான் இன்று காலை எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல இன்று தமிழக மேற்கு ,மேற்கு உள் ,தென் உள் ,உள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே  இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.குறிப்பாக இன்றும் #ஈரோடு மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேபோல இன்று #நீலகிரி ,#தேனி ,#திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் மேற்கு பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்  #கோவை மாவட்டம் #வால்பாறை  - #திண்டுக்கல் மாவட்டம் #கொடைக்கானல் தேனி மாவட்டம் #பெரியகுளம் - #போடி மற்றும் கேரள மாநிலம் #மூணாறு இடையே உள்ள பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளிலும் இன்று மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேபோல இன்றும் #மேகமலை சுற்றுவட்டப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள #மதுரை மாவட்ட மேற்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் இன்று #மதுரை மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளிலும் சிவகங்கை , புதுக்கோட்டை ,விருதுநகர் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில்  மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இவைதவிர்த்து தர்மபுரி ,கிருஷ்னகிரி ,சேலம் ,நாமக்கல் ,ஈரோடு ,திருப்பூர் ,கோவை ,திருச்சி மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை மழை பதிவாகலாம் #புதுச்சேரி மாவட்டம் அருகே உள்ள விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட பகுதிகளில் இன்றும் ஒரு சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.மழை மேகங்கள் கொஞ்சம் பரவலாக இன்று பதிவாக தொடங்கியதும் நிகழ் நேரத்தில் அதனுடைய அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...