தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

11-05-2019 காலை 10:20 மணி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள் | இன்றைய மழை வாய்ப்புகள்

11-05-2019 நேரம் காலை 10:20 மணி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின் படி நேற்று நமது நிகழ் நேர தகவல்களில் அவ்வப்பொழுது குறிப்பிட்டு இருந்தது போல விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளிலும் கிருஷ்னகிரி  மற்றும் தேனி மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகியுள்ளது.இவைத் தவிர்த்து புதுக்கோட்டை ,தர்மபுரி ,ஈரோடு ,நீலகிரி ,மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகியுள்ளது.11-05-2019 ஆகிய இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மேற்கு உள் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம்.அடுத்த 24 மணி நேரத்தின் மழை வாய்ப்புகள் தொடர்பாக இன்று பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.

11-05-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் தகவல்கள்.

#பிளவாக்கள் - #PILAVAKKAL (விருதுநகர் மாவட்டம் ) - 40 மி.மீ
#பெரியார் - #PERIYAR (தேனி மாவட்டம் ) - 31 மி.மீ
#ஓசூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 28 மி.மீ
#ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம் ) - 26 மி.மீ
#தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
#தேக்கடி - #THEKADI (தேனி மாவட்டம் ) - 13 மி.மீ
#சூளகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
#இனாம்குளத்தூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 6 மி.மீ
#வாட்ராப்  - #WATRAP (விருதுநகர் மாவட்டம் ) - 5 மி.மீ
#எம்ராளட் (நீலகிரி மாவட்டம் ) - 5 மி.மீ
#அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) -5 மி.மீ
#அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 4 மி.மீ
#கள்ளிக்குடி (மதுரை மாவட்டம் ) - 4 மி.மீ
#ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம் ) - 3 மி.மீ
#கிருஷ்னகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 3 மி.மீ
#மேளலத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 1 மி.மீ
#பரமத்திவேலூர் (நாமக்கல் மாவட்டம் ) - 1 மி.மீ
#தேன்கனிக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 1 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 1 மி.மீ

நான் குறிப்பிட்டு இருக்கும் பகுதிகள் தவிர இன்னும் ஓரிரு இடங்களின் மழை அளவுகள் தொடர்பான தகவல்கள் வர வேண்டியதுள்ளது.அவைகளும் கிடைத்த பிறகு இன்று நன்பகல் வாக்கிலே குரல் பதிவை பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...