தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

13-05-2019 அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ள பகுதிகள்

13-05-2019 நேரம் பிற்பகல் 2:00 மணி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பாக இன்று காலையிலேயே அதிகமாகி பதிவிட்டு விட்டேன் என்று கருதுகிறேன்.தற்பொழுது அதையே திரும்ப பதிவிடுவது போல் கூட ஆகிவிடும்.13-05-2019 ஆகிய இன்றும் நான் இன்று காலையில் பதிவிட்டு இறந்தது போல #நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேபோல #கோவை மாவட்டம் #வால்பாறை  - #கேரள மாநிலம் #மூணாறு  மற்றும் #திண்டுக்கல் மாவட்டம் இடையே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய சற்று வலுவான மழை பதிவாகலாம் குறிப்பாக கேரள மாநிலம் #மூணாறு சுற்றுவட்டப் பகுதிகளில் சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய வலுவான மழை பதிவாகவும் வாய்ப்புகள் உள்ளது மேலும் #இடுக்கி மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.

 தமிழகத்தை பொறுத்தவரையில் நீலகிரி ,திண்டுக்கல் ,தேனி ,கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல ஈரோடு ,திருப்பூர் ,சேலம் ,நாமக்கல் ,மதுரை ,சிவகங்கை ,கோவை மாவட்டங்களிலும் இன்று ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம்.இவைதவிர்த்து காற்றின்  திசையில் ஏற்படும் சிறு மாறுதல்களை பொறுத்து ஓரிரு உள் மாவட்ட பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.

கேரளாவை பொறுத்தவரையில் இன்று சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் #இடுக்கி ,#பாலக்காடு மற்றும் #வயநாடு மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.அதேபோல #கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் #மைசூரு மற்றும் #பெங்களூரு சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட தெற்கு கர்நாடக மாநில பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.

நிகழ் நேரத்தில் மழை பதிவாகி வரும் பகுதிகளின் தகவல்களுடன் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...