தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

13-05-2019 இன்று மழை பதிவாக வாய்ப்புகள் உள்ள பகுதிகள் | கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழை அளவுகள்

13-05-2019 நேரம் காலை 10:15 மணி இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியிருக்கும் பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது இன்று நீலகிரி மாவட்டத்தின் ஆங்காங்கே சற்று வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது கடந்த 24 மணி நேரத்திலும் நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் நீலகிரி மாவட்டத்தில் இதே சுழல்களே தொடரும் மேலும் இன்று கேரள மாநிலம் #மூணாறு - கோவை மாவட்டம் வால்பாறை  - திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இடையே உள்ள பகுதிகளிலும் அதனை சுற்றுவட்டப் பகுதிகளிலும் இன்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதே போல் தேனி மாவட்டம் பெரியார் மற்றும் மேகமலை சுற்றுவட்டப் பகுதிகளிலும் இன்று ஓரளவு மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.பொதுவாக இன்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் ,மேற்கு மாவட்டங்களை ,மேற்கு உள் ,தென் உள் மற்றும் ஒரு சில உள் மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாக அதிக வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பாக இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.

13-05-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் )  - 36 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 33 மி.மீ
#கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம் ) - 22 மி.மீ
#தொட்டபேட்டா ,உதகை (நீலகிரி மாவட்டம் ) - 18 மி.மீ
#மேல்பவானி - #UPPERBHAVANI (நீலகிரி மாவட்டம் ) - 18 மி.மீ
#கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 16 மி.மீ
#அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ
#பர்லியார் (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
#சுரலக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 7 மி.மீ
#எமரால்ட் (நீலகிரி மாவட்டம் ) - 6 மி.மீ
#கெத்தி  (நீலகிரி மாவட்டம் ) - 4 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 4 மி.மீ
#வாடிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 3 மி.மீ
#வீரப்பாண்டி (தேனி மாவட்டம் ) - 3 மி.மீ
#சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம் ) - 2 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...