தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

15-05-2019 நேரம் இரவு 8:20 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் ராடார் படம் இன்று இரவு 8:00 மணி வாக்கில் பதிவானது அதன்படி தற்சமயம் #திண்டுக்கல் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாக தொடங்கியுள்ளன.தற்சமயம் #சின்னாளம்பட்டி - #சிறுமலை என திண்டுக்கல் மாவட்டத்தின் தெற்கு பகுதிகளில் மிக வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.மேலும் #இலங்குறிச்சி , #அய்யலூர் , #நத்தம் , #வத்தலகுன்டு அருகே உள்ள பகுதிகளிலும் அதன் இடையே உள்ள பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் மிக வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன தற்சமயம் அச்சுற்றுவட்டப் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய இடியுடன் கூடிய மழை ஆங்காங்கே பதிவாகி வரலாம் மேலும் #மதுரை மாவட்டம் #அழகர்கோயில்மலை #அலங்காநல்லூர்  -பாலமேடு பகுதிகளிலும் சற்று வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #ஆண்டிபட்டி-#ஜக்கம்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

மேலும் நான் கடந்த குரல் பதிவில் தெரிவித்து இருந்த #திருப்பூர் மாவட்ட மழை மேகங்கள் சற்று வலு குறைந்து மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து #கோவை மாவட்டத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பொழிவை ஏற்படுத்தி வருகிறது தற்சமயம் #பொள்ளாச்சி - #வேட்டைக்காரன்புதூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #கோவை மாநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன தற்பொழுது #தொண்டாமுத்தூர் - #அணைகட்டி -#சின்னதடகம் ,#பாரதியார்பல்கலைக்கழகம் ,#தொலம்பாளையம் , #வெள்ளியங்காடு சுற்றுவட்டப் பகுதிகளில் சற்று வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #திண்டுக்கல் மாவட்டம் #பழனி சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அந்த திண்டுக்கல் மாவட்ட மழை மேகங்கள் மேலும் வட மேற்கு திசையில் நகர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தின் வட மேற்கு பகுதிகளிலும் ,கரூர் மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை பொழிவை ஏற்படுத்த முற்பட வாய்ப்புகள் உள்ளது.அதன் நகர்வுகள் தொடர்பாக அடுத்த குரல் பதிவில் பதிவிடுகிறேன்.

தர்மபுரி மாவட்டம் #காரிமங்கலம்  - #அடிலம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் தற்சமயம் மிக வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதே போல #சலமே மாவட்டம் #எடப்பாடி - #அம்மாபேட்டை அருகிலும் #ஈரோடு மாவட்டம் #அந்தியூர் பகுதிக்கு கிழக்கிலும் ஒரு சில இடங்களில் சற்று வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.இவை தவிர்த்து பல அப்பகுதிகளில் பல இடங்களிலும் சற்று வலுகுறைந்த மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அனைத்து பகுதிகளையும் ஒரே பதிவில் குறிப்பிட இயலாது அடுத்த குரல் பதிவில் சில பகுதிகளை இணைத்து பதிவிடுகிறேன்.

பெரம்பலூர் மாவட்டம் #லாடாபுரம் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.அடுத்த சில மணி நேரங்களில் #திருப்பூர் மாவட்ட தெற்கு பகுதிகளிலும் #கொடைக்கானல் சுற்றுவட்டப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை சில இடங்களில் பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...