தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2019 தென்மேற்கு பருவமழை தொடர்பான தகவல்கள் | 2019 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கலாம் ? | எப்பொழுது தொடங்கலாம் ?

16-05-2019 நேரம் காலை 11:05 மணி நான் கடந்த வாரம் நமது பக்கத்தில் அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை பதிவிடுகையில் அதனுடன் இணைத்து நிகழும் 2019 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கலாம் என்பது தொடர்பான என்னுடைய கணிப்புகளையும் சுருக்கமாக வெளியிட்டு இருந்தேன்.நீங்கள் அதனை விரிவான தகவல்கள் அடங்கிய ஒரு பதிவாக பதிவிடுமாறு என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தீர்கள் தற்பொழுது சற்று விரிவாக பதிவிடுகிறேன்.

MJO வின் நகர்வுகள் மற்றும் மழை அளவுகளில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம்
------------------------------------------------------------------------
தென்மேற்கு பருவமழை எப்பொழுது தொடங்க வாய்ப்புகள் உள்ளது என்பதனை பற்றி ஆராய்ககையில் கால நிலை மாற்றங்களுடன் தொடர்புடைய மேடன்-ஜூலியன் அலைவின்  - MJO (Madden Julian Oscillation) இன் தற்போதைய நகர்வுகளை ஆராய்வது அவசியமாகிறது .தற்பொழுது அந்த மேடன்-ஜூலியன் அலைவின்  - #MJO (#Madden-Julian Oscillation)ஆனது அதன் 8 வது கட்டத்தில் 1 க்கும் அதிகமான வீச்சு அளவுடன் (Phase 8 with amplitude above 1) வலுவாக உள்ளது அடுத்து வரக்கூடிய சில நாட்களில் அது நகர்ந்து அதன் 1 வது கட்டத்துக்கு வலுவுடன் வரலாம் (Phase 1 with the same amplitude) அதன் பின் அதனுடைய வலு குறைய தொடங்கலாம் (Then after its amplitude may decreases) அதன் பின்னர் அடுத்த சில நாட்களில் அது 1க்கும் குறைவான வீச்சு அளவுடன் அதன் 2 வது கட்டத்தை நிகழும் மே மாத இறுதி வாரத்தில் எட்ட முற்படலாம் என ஒரு சில வெளிநாட்டு மாதிரிகளின் கணிப்புகள் தெரிவிகின்றன.எதுவாயினும் அது அதனுடைய 1 மற்றும் 2 வது கட்டத்தில் இருக்கையில் பூமத்திய ரேகை அருகே உள்ள மேற்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் சாதகமான சூழல்கள் உருவாகும் (When it is in Phase 1 and 2 ..that is Convective Phase of  Western Indian Ocean).இதன் காரணமாக அரபிக்கடல் பகுதிகளிலும் சாதகமான சூழல்கள் உருவாகும் ஆகையால் இந்த மாத இறுதி வாரத்தில் கேரளாவில் வெப்பசலன மழையின் அளவு சற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக மே மாத இறுதி வாரத்தில் அல்லது அதற்கு பிறகு இதனால் தமிழக மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளும் பயனடையும் தமிழக மேற்கு மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதே போல பெங்களூரு , மைசூரூ மற்றும் மடிகேரி உட்பட கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை அளவு அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அதிகரிக்க தொடங்கலாம் தமிழகத்திலும் மேற்கு உள் ,வட உள் மாவட்டங்களில் அவ்வப்பொழுது வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக எப்பொழுது அறிவிப்பு வெளியாகலாம் ?
-------------------------------------------------------------------
ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக அதிகார பூர்வ அறிவிப்புகள் இந்திய வானிலை ஆய்வு மையத்திடன் இருந்து வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

2019 ஆம் ஆண்டில் தென் மேற்கு பருவமழை எப்படி இருக்கலாம் ?
----------------------------------------------------------------------
 2019 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் பதிவாகும் மழை அளவுகளை பொறுத்தவரையில் கேரளாவில் இயல்பான அளவை ஒத்தே பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேசமயம் இந்திய நாட்டின் ஒட்டுமொத்த அளவானது இயல்பு அல்லது இயல்புக்கு குறைவாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.தமிழகத்தை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாக இருக்கும் தருணங்களில் உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பெரிய அளவிலான வெப்பசலன மழையை எதிர்பார்க்க முடியாது அதே சமயம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பதிவாகும் வெப்பசலன மழையானது சற்று அதிகரித்தே இருக்க வாய்ப்புகள் உள்ளது.

தென்மேற்கு பருவமழை எப்பொழுது தீவிரமடைய தொடங்கலாம் ?
--------------------------------------------------------------------------------------
ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது.இதன் காரணமாக தமிழக மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளிலும் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உளள்து.அதன் பின் ஒவ்வொரு மாதத்திலும் அதவாது ஜூலை , ஆகஸ்ட்  ,செப்டம்பர் மாதங்களில் ஓரிரு முறை தீவிர மடையலாம்.

அனைவரும் Indian Ocean Dipole தொடர்பாக என்னிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பி வருகிறீர்கள் அது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்னரே நமது பக்கத்தில் நான் பதிவிட்டு இருந்தேன்.தற்பொழுதும் சில தகவல்களை இணைக்கிறேன்.Indian Ocean Dipole (#IOD) அதன் நேர்மறையான (POSITIVE PHASE) இல் இருக்கும் பொழுது #தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைய சாதகமான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துகிறது.Indian Ocean Dipole (#IOD) என்றால் என்ன ?
Indian Ocean Dipole (இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம்) ஆனது இந்திய பெருங்கடலின் பூமத்திய ரேகை (Equator ) அருகே உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளின் இடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டை குறிக்கிறது இதை இந்தியன் நினோ என்றும் வழங்குவார்கள் அதற்கு காரணம் இதன் விளைவுகள் இந்தோனேஷியா , ஆப்பிரிக்கா , ஆஸ்தரலியா போன்ற பகுதிகளின் வானிலையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை அதே போல இவை இந்தியாவிலும் பருவமழை காலங்களில் பெய்யும் மழையின் அளவில் பெரிய அளவிலான மாற்றங்களை உருவாக்க கூடியவை.

Indian Ocean Dipole (#IOD) எதனால் ஏற்படுகிறது ? 
இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் பூமத்திய ரேகைக்கு (Equator) வடக்கே சோமாலியா அருகே உள்ள அரபிக்கடல் பகுதியின் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் தான் இந்தியன் நினோ என்று அழைக்கபடும் இந்த Indian Ocean Dipole ஏற்பட முக்கிய காரணியாக உள்ளது.


IOD தொடர்பாக மேலும் விவரங்களை அறிய  - https://goo.gl/XmfuBT
எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL
எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby


இது தொடர்பான தகவல்களில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் மாற்றுக் கருத்து இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தென்மேற்கு பருவமழை தொடர்பான கணிப்புகள் அனைத்தும் தற்போது நிலவி வரும் சூழல்களை உள்ளடக்கியது இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...