தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

19-05-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

19-05-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

19-05-2019 நேரம் இரவு 8:40 மணி நான் இன்று பிற்பகலில் மழைக்கான வாய்ப்புகளில் பதிவிட்டு இருந்தது போல தற்பொழுது தமிழகத்தில் பதிவாகும் மழையின் அளவு கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சற்று குறைந்துள்ளது இன்றும் அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் மழை பதிவாகி வந்ததை அறியமுடிந்தது.குறிப்பாக நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சில இடங்களில் சில மணி நேரங்களுக்கு முன்பு வலுவான மழை மேகங்கள் ராடாரில் பதிவாகி வந்தன மற்றபடி இன்று மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலான ஒரு மழை எங்கும் பதிவானதாக தகவல்கள் இல்லை அடுத்து வரக்கூடிய 2 அல்லது 3 நாட்களுக்கும் தற்போதைய இந்த சூழல்கள் தொடரும் அங்கும் இங்குமாக ஓரிரு இடங்களில் மழை பதிவாகலாம் அது தொடர்பாக அன்றன்றைக்கு நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.

23-05-2019 அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய நாட்களில் தமிழக மேற்கு உள் மற்றும் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அதே போல #கேரள மாநிலத்திலும் #கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் #பெங்களூரு  , #மைசூரு சுற்றுவட்டப் பகுதிகளிலும் மீண்டும் வலுவான வெப்பசலன மழை அங்கும் இங்குமாக பதிவாக தொடங்கலாம்.25-05-2019 ஆம் தேதி வாக்கில் மேற்கு ,மேற்கு உள் மாவட்டங்களுடன் சேர்ந்து வட உள் மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் வெப்பசலன மழை கடந்த வாரத்தை போல பதிவாக தொடங்க வாய்ப்புகள் உள்ளது.இது நாம் முன்பே விவாதித்தது தான் இந்த மாத இறுதி வாரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரளவு குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு வெப்பசலன மழை பதிவாகலாம்.மேடன் ஜூலியன் அலைவின் (MJO) நகர்வு இந்த மாத இறுதி வார மழை அளவு அதிகரிப்புக்கு சாதகமாக உள்ளது தற்பொழுது மேடன் ஜூலியன் அலைவு  (MJO)ஆனது அதன் 8 வது கட்டத்தில் 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் மிக வலுவாக உள்ளது அடுத்த இரண்டு அல்லது 3 நாட்களில் அது நகர்ந்து அதன் 1 வது கட்டத்துக்கு வலுவாக வரலாம் அதற்கு அடுத்து வரக்கூடிய வாரத்தில் அது பயணித்து அதன் 2 வது கட்டத்தை எட்ட வாய்ப்புகள் உள்ளது.

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களில் அந்தமான் நிகோபார் தீவுகளில் தொடங்கலாம் கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கலாம்.தமிழக வட கடலோர மாவட்டங்களில் வெப்பசலன் மழையை அடுத்து பிறக்க இருக்கும் ஜூன் மாதத்தில்  எதிர்பார்க்கலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...