தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

27-05-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

27-05-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

27-05-2019 நேரம் காலை 11:00 மணி அடுத்த வரக்கூடிய வாரத்திலும் தமிழக மேற்கு உள் , மேற்கு மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் பிற்பகலுக்கு பிறகு இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.குறிப்பாக #நீலகிரி ,கிருஷ்னகிரி , தர்மபுரி மாவட்டங்களிலும் வேலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் ஈரோடு மாவட்டத்தின் வடக்கு பகுதிகளிலும் சேலம் ,கோவை ,திருப்பூர் மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே அவ்வப்பொழுது மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது இவைதவிர்த்து அடுத்து வரக்கூடிய நாட்களில் கரூர் , திருச்சி ,நாமக்கல் , திண்டுக்கல் ,தேனி ,மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது ஓரிரு இடங்களில் மழை பதிவாகலாம்.சூழல்களுக்கு ஏற்ப அன்றன்றைக்கான அடுத்த 24 மணி நேர மழை வாய்ப்புகளை தினந்தோறும் நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.பெங்களூரு  - மைசூரு சுற்றுவட்டப் பகுதிகளிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.

அதிகபட்ச வெப்பநிலை  தொடர்பான தகவல்கள்
---------------------------------------------------------------------------
அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழக உள் மற்றும் கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் தற்போதைய சூழல்கள் தொடரும்.பகல் நேர வெப்பநிலையானது பல இடங்களிலும் அதிகரித்தே இருக்கலாம்.குறிப்பாக திருச்சி , தஞ்சை ,பெரம்பலூர் ,அரியலூர் ,திருவண்ணாமலை ,வேலூர் ,திருத்தணி உட்பட திருவள்ளுர் மாவட்டத்தின் மேற்கு பகுதிகள் , காஞ்சிபுரம் , விழுப்புரம் , கடலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதிகள் ,மதுரை ,புதுக்கோட்டை,சிவங்கங்கை ,விருதுநகர் ,நெல்லை மாவட்டத்தின் கிழக்கு பகுதிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளின் பல இடங்களிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் 104°F க்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகலாம்.

#திருத்தணி பகுதியில் நேற்று அதிகபட்சமாக பகல் நேரத்தில் 113°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது அதேபோல #வேலூர் பகுதியிலும் கிட்டத்தட்ட 111°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் #அரக்கோணம் , வேலூர் ,திருத்தணி உட்பட அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் 110°F அளவை ஒட்டியே பகல் நேர வெப்பநிலையே தொடரலாம்.

மேலும் இவைத்தவிர்த்து #மயிலாடுதுறை , #கும்பகோணம் , #நெய்வேலி , #காஞ்சிபுரம் , #திருச்சி ,#தஞ்சாவூர், #திருவண்ணாமலை  , #புதுக்கோட்டை , #கள்ளக்குறிச்சி , #பெண்ணாடம் , அரியலூர் ,பெரம்பலூர் , விருத்தாச்சலம் , திருக்கோவிலூர்  , கரூர் , திருமயம் , மதுரை ,மேலூர் ,விருதுநகர் , சிவகாசி  ,நாமக்கல் உட்பட பல இடங்களிலும் பகல் நேரத்தில் தற்போதைய சூழல்களே தொடரும் 102°F பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகலாம்.அணைத்து பகுதிகளின் பெயர்களையும் ஒரு சேர இங்கு பதிவிடுவது சிரமம் ஆகையால் சில பகுதிகளின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளேன்.

#புதுச்சேரி ,#காரைக்கால் ,#சென்னை ,கடலூர் ,நாகை   உட்பட வட கடலோர பகுதிகளில் தற்போது நிலவி வரும் சூழல்கள் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தொடரலாம்.

தென்மேற்கு பருவமழை
--------------------------------------
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாம் எதிர்பார்த்ததைப் போன்று சற்று தாமதாமாக தொடங்கலாம்.மேலும் நான் தென்மேற்கு பருவமழை தொடர்பாக கடந்த வாரத்தில் பதிவிட்டு இருந்தது போல் ஜூன் மாத 2 வது அல்லது 3 வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையலாம் இதன் காரணமாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் பலனடையும்.தமிழகத்தை பொறுத்தவரையில் குறைந்தது  ஜூன் 10 ஆம் தேதி வரையில் தற்பொழுது பதிவாகி வருவதை போல் இடியுடன் கூடிய வெப்பசலன மழை உள் மாவட்டங்களில் பதிவாகலாம்.வட கடலோர மாவட்டங்களில் அடுத்து பிறக்க இருக்கும் ஜூன் மாதத்தில் வெப்பசலன மழை பதிவாகும் என நம்பலாம்.

தென்மேற்கு பருவமழை தொடர்பாக அடுத்த சில நாட்களில் மீண்டும் பதிவிடுகிறேன்.

 மேலும் நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவை வரும் வானிலை சூழல்களை அடிப்படையாக கொண்ட ஒரு கணிப்புதான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...