தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

28-05-2019 நேரம் இரவு 8:55 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் ராடார் படம் இன்று இரவு 8:40 மணி வாக்கில் பதிவானது அதன்படி #ஈரோடு மாவட்டம் #கோபிசெட்டிபாளையம் உட்பட #ஈரோடு மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் ஆங்காங்கே மிக வலுவான மேகங்கள் பதிவாகி வருகின்றன இன்னும் சற்று நேரத்தில் #கோவை மற்றும் #திருப்பூர் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக தொடங்கலாம.குறிப்பாக அடுத்த சில நிமிடங்களில் #அவிநாசி  , #அன்னூர் , #கருமாத்தம்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை தொடங்க வாய்ப்புகள் உள்ளது மேலும் தற்சமயம் #சவக்காட்டுப்பாளையம் - #நம்பியூர் சுற்றுவட்டப் பகுதிகளில் மிக மிக வலுவான மழை மேகங்கள் பதிவாக தொடங்கியுள்ளன அப்பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாகி வரலாம் #திருப்பூர்  - #ஊத்துக்குளி சுற்றுவட்டப் பகுதிகளிலும் இன்னும் சற்று நேரத்தில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது. மேலும் தற்சமயம் #ஈரோடு மாவட்டம் #சத்தியமங்கலம் ,#கொடியேறி , #காசிபாளையம் அருகிலும் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #ஈரோடு மாவட்டம் #குன்றி  - #மூங்கில்பாளையம் மற்றும் #பர்கூர் இடையே உள்ள பகுதிகளிலும் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன தற்சமயம் நான் மேற்குறிப்பிட்ட இருக்கும் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய இடி பதிவாகி வரலாம்.

மேலும் #நாமக்கல்  - #செம்மேடு -#சேந்தமங்கலம் உட்பட #நாமக்கல் மாவட்டத்தின் பல இடங்களிலும் தற்சமயம் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அவை மேலும் மேற்கு நோக்கி நகரும் என்பதால் ஈரோடு மாவட்டத்தில் தற்பொழுது நிலவி வரும் சூழல்கள் தொடரும் குறிப்பாக #கிள்ளம்பாடி - #சிவகிரி சுற்றுவட்டப் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் தற்பொழுது #தர்மபுரி மாவட்டம் #மரணடஹள்ளி , #ஓக்கேனக்கல்  மற்றும் #கிருஷ்னகிரி மாவட்டம் #ராயக்கோட்டை சுற்றுவட்டப் பகுதிகளிலும் பதிவாகி வருகின்றன இவை தவிர்த்து கிருஷ்னகிரி ,அடிலம் ,தர்மபுரி ,நல்லம்பள்ளி ,#தோப்பூர் ,#பொம்மிடி ,#மொரப்பூர் ,#பாப்பிரெட்டிப்பட்டி ,#சாம்பல்பட்டி ,#ஊத்தாங்கரை மற்றும் #கல்ராயன் மலை பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இவைதவிர்த்து #வேலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் , #கிருஷ்னகிரி ,தர்மபுரி மற்றும் #சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் பல இடங்களிலும் வலு குறைந்த மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #திண்டுக்கல் மாவட்டம் #வேடசந்தூர் ,#ஜங்கல்பட்டி மற்றும் #கரூர் மாவட்டம் #குஜிலியாம்பாறை ,#வெள்ளியணை - #பாளையம் இடையே உள்ள பகுதிகளிலும் வலுவான மழை மேகங்கள் பதிவாக தொடங்கியுள்ளன.

இன்று இரவு மழை பதிவாகிய சில பகுதிகளின் மழை அளவுகளுடனும் நிகழ் நேர தகவல்களுடனும் மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...