02-05-2019 நேரம் இரவு 11:20 மணி இன்று நான் அந்த #FANI (#ஃபனி ) அதி தீவிர புயலின் நகர்வுகள் தொடர்பாக தனியார் தளத்தின் உதவியுடன் பின்தொடர்க்கையில் இன்று 8:00 மணி வாக்கில் அது Lattitude 17.8°N மற்றும் Longitude 85°E இல் நிலைக் கொண்டிருந்தது.நான் இதற்கு முந்தைய குரல் பதிவில் தெரிவித்து இருந்தது போல அது கரையை கடக்க தாயாராக கிட்டத்தட்ட #ஸ்ரீகாகுளம் பகுதிக்கு ஒரு 150 கி.மீ தென் கிழக்கு திசையில் நிலைகொண்டிருந்தது என்று சொல்லலாம்.தற்பொழுது செயற்கைகோள் படங்களின் உதவியுடன் பார்க்கையில் அது மேலும் நகர்ந்து #பிரமாப்பூர் (#Brahmapur) அருகே உள்ள கடலோர பகுதிகளை நெருங்கி வர வேண்டும் மேலும் அந்த புயலின் வெளிப்பகுதி கரையை நெருங்கி வருகிறது அடுத்த சில மணி நேரங்களில் அதன் வெளிப்பகுதி ஒடிசா மாநிலத்தின் கரையோர பகுதிகளில் உட்புக முற்படலாம்.சற்று முன்பு வரை எனக்கு இந்த நேரத்தில் பதிவிட எண்ணம் தோன்றவில்லை ஆனால் அதன் தற்போதைய காற்றின் அதிகபட்ச வேகத்தை ஆராய்கையில் இதை கண்டிப்பாக பதிவிட வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது தற்பொழுது அதாவது இரவு 8:00 மணி வாக்கில் அதன் அதிகப்பட்ச காற்றின் வேகம் மணிக்கு 130 - 140 knots அதாவது மணிக்கு 240 கி.மீ - 260 கி.மீ ஆனால் இந்த வேக அதிகரிப்பு தொடர்பான அதிகாரபூர்வ தகவல் ஆய்வு மையத்திடம் இருந்து இன்னும் வெளியாகவில்லை.ஒரு வேலை அந்த தனியார் தளங்கள் தெரிவிப்பது போல அந்த #FANI (#ஃபனி ) அதி தீவிர புயலின் அதிகபட்ச காற்று வேகம் தற்பொழுது 130 -140 knots என்றால் அது 5 ஆம் வகை சூறாவளிகளுடன் ஒப்பிடும் அளவு சக்தி வாய்ந்தது என கூறலாம்.உலகின் சக்தி வாய்ந்த புயல்களில் ஒன்று என்றே கூறிவிடலாம்.இதைப்போன்ற புயல்கள் பசிபிக் கடல் பகுதிகளில் தான் அதிகமாக உருவாகும்.உண்மையில் அது கரையை கடக்கையில் அதன் அதிகபட்ச காற்றின் வேகம் என்னவென்பது வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து நாளை தகவல் வருகையில் தான் உறுதியான நிலவரம் தெரியவரும்.
நான் இதற்கு முந்தைய குரல் பதிவில் பதிவிட்டு இருந்தது போல அடுத்த சில மணி நேரங்களில் அந்த #FANI (#ஃபனி ) அதி தீவிர புயலின் வெளிப்புறப் பகுதி ஒடிசாவின் கடலோர பகுதிகளில் உட்புக முற்படலாம் 03-05-2019 ஆகிய நாளை காலை மற்றும் நண்பகல் வாக்கில் அதன் மையப்பகுதி கரையை கடக்க முற்படலாம் #பிரமாப்பூர் (#brahmapur) அருகே உள்ள கடலோர பகுதிகளில் அது கரையை கடக்க முற்படலாம் பின்னர் நிலப்பகுதியிலேயே வட -வட கிழக்கு திசையில் நகர்ந்து ஒரு தீவிர புயல் என்கிற நிலையில் மேற்கு வங்கத்தில் நிலைகொண்டு 04-05-2019 ஆகிய நாளை மறுநாள் பிற்பகல் வாக்கில் வங்கதேசத்தின் நிலப்பகுதியை ஒரு புயல் என்கிற நிலையில் அது அடையலாம்.
அந்த #FANI (#ஃபனி )புயலின் நிலை தொடர்பாக நாளை மீண்டும் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

0 comments:
கருத்துரையிடுக