தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

07-06-2019 அடுத்து வரக்கூடிய நாட்களில் வானிலை எப்படி இருக்கலாம் ? கேரளாவில் தொடங்க இருக்கும் தென்மேற்கு பருவமழை தொடர்பான தகவல்கள்.


 07-06-2019 நேரம் பிற்பகல் 2:45 மணி கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு திசை காற்று சற்று வீரியம் பெற தொடங்கியுள்ளது பொதுவாக தெற்கு கேரள மாநில பகுதிகளிலும் தென் மேற்கு திசை காற்று வீரியம் அடைந்து  வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது கேரளாவின் வடக்கு பகுதிகளிலும் முன்னேறி மேலும் வீரியமடைய தொடங்கலாம்.09-06-2019 அல்லது 10-06-2019 ஆம் தேதி வாக்கில் அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய நாளில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையத்திடன் இருந்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகலாம்.09-06-2019 ஆம் தேதி வாக்கில் கேரளாவுக்கு மேற்கே அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளது அது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் வட -வட மேற்கு திசையில் அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து செல்லலாம் இதன் காரணமாக 11-06-2019 அல்லது 12-06-2019 ஆம் தேதி வாக்கில் மும்பை முதல் திருவனந்தபுரம் இடையே உள்ள அநேக கர்நாடக ,கேரள ,கோவா மற்றும் மஹாராஷ்டிர மாநில கடலோர பகுதிகளிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

அங்கும் இங்குமாக மழை அவ்வப்பொழுது பதிவாகி வந்தாலும் கேரளாவை பொறுத்தவரையில் வறட்சியான சூழல்களே இந்த ஆண்டு தொடக்கம்  இருந்து நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய வாரத்தில் இந்த நிலை மெல்ல மெல்ல மாற தொடங்கலாம்.மற்றபடி அடுத்து வரக்கூடிய வாரத்தில்  கேரளாவில் வெள்ளம் என்றெல்லாம் பரவி வரும் வதந்திகள் எல்லாம் தவிர்க்க பட வேண்டியவை.ஜூன் மாதம் தொடங்கி இத்தனை நாட்கள் கழிந்த பிறகும் இதுநாள் வரையில் கேரள மாநிலம் முழுவதிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான பரவலான கனமழை எதுவம் பதிவாகவில்லை.அடுத்து வரக்கூடிய வார நாட்களில் கேரளாவில் பதிவாகும் மழை என்பது இயல்பான ஒன்று தான்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைகையில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக #வால்பாறை , #தேவாலா  , #பேச்சிப்பாறை மற்றும் #பெரியார் சுற்றுவட்டப் பகுதிகள் இந்த ஆண்டும் அதிக பலனை பெறலாம்.அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அதிக மழை பொழிவை ஏற்படுத்தலாம் எனபது தொடர்பாக விரிவாக பதிவிடுகிறேன்.

09-06-2019 அல்லது 10-06-2019 ஆம் தேதி முதல் #தாராபுரம் ,பல்லடம் ,பொள்ளாச்சி ,திருப்பூர் உட்பட பல இடங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக மாலை நேரங்களில் மணிக்கு அதிகபட்சமாக 55 கி.மீ முதல் 65 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும்.இது தொடர்பான விரிவான தகவல்களையும் அடுத்து வரக்கூடிய நாட்களில் பதிவிடுகிறேன்.

தமிழக வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் மழைக்காக நாம் இன்னும் சில நாட்கள் காத்திருந்து தான் ஆக வேண்டும்.மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல இலங்கையின் தென் மேற்கு பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று சாதகமாக உள்ளது.

வானிலை தொடர்பான மேலும் பல தகவல்களுடன் இன்று மீண்டும் பதிவிடுகிறேன்.மேலும் நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...