தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

08-06-2019 நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்தெந்த பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் |தென்மேற்கு பருவமழை

08-06-2019 நேரம் இரவு 9:45 மணி காற்றின் திசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் காரணமாக இன்று பிற்பகல் முதல் அங்கும் இங்குமாக சில பகுதிகளில் உருவான சிறிய மழை மேகங்கள் அங்கும் இங்குமாக ஓரிரு இடங்களில் மழை பொழிவை ஏற்படுத்தி விரைவில் வலுவிழந்து வருகின்றன சற்று முன்பு திருவண்ணாமலை மாவட்டம் #போளூர் - #பூண்டி அருகே மழை மேகங்கள் பதிவாகி வந்தன தற்பொழுது அவையும் வலுவிழந்து வருகின்றன மேலும் இன்று மாலை #திருச்சி மாவட்டம் #துவராங்குறிச்சி சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அச்சமயம் பதிவாகி வந்த ராடார் படங்களின் வாயிலாக அறிய முடிந்தது.அது தொடர்பாக ஒரு குரல் பதிவையும் இன்று மாலை நமது YOUTUBE பக்கத்தில் பதிவிட்டு உள்ளேன்.இன்று பதிவாகிய மழை தொடர்பாக அடுத்த சில மணி நேரங்களில் நமது YOUTUBE பக்கத்தில் மீண்டும் ஒரு குரல் பதிவை பதிவேற்றம் செய்கிறேன்.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று மேற்கு உள் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும் வறண்ட வானிலையே நிலவி உள்ளது.

தென்மேற்கு பருவ காற்று (காற்றின் வேகம் அதிகரிப்பு )
-----------------------------------------------------

நான் இதற்கு முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது போல 09-06-2019 ஆகிய நாளை முதல் தமிழகத்தின் பல இடங்களிலும் பிற்பகலுக்கு பிறகு மாலை மற்றும் இரவு நேரங்களில் மேற்கு திசை காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக கோவை மாவட்டம் #பொள்ளாச்சி ,#தாராபுரம் ,#திருப்பூர் ,#காரமடை ,#கோவை ,#பல்லடம் சுற்றுவட்டப் பகுதிகளில் 09-06-2019 ஆகிய நாளை மணிக்கு அதிகபட்சமாக 55 கி.மீ முதல் 65 கி.மீ வேகத்தில் பிற்பகலுக்கு பிறகு மாலை மற்றும் இரவு காற்று வீசக்கூடும் #தாராபுரம் சுற்றுவட்டப் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும் அதேசமயம் அடுத்த சில நாட்களில் குறிப்பாக 11-06-2019 ஆம் தேதிக்கு பிறகு #தாராபுரம் சுற்றுவட்டப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கலாம் மணிக்கு அதிகபட்சமாக 75 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீச வாய்ப்புகள் உள்ளது

#கும்பகோணம் ,#மான்னார்குடி ,#காரைக்கால் , #நாகப்பட்டினம் ,#திருவாரூர் ,#மயிலாடுதுறை ,#சீர்காழி ,#புதுக்கோட்டை உட்பட நாகை ,திருவாரூர்  ,புதுக்கோட்டை மற்றும் #தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகப்பட்சமாக மணிக்கு 50 கி.மீ  முதல் 60 கி.மீ வரையில் காற்று வீசக்கூடும் குறிப்பாக கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக உணரப்படலாம்.

இவைதவிர்த்து புதுச்சேரி ,கடலூர் #விருதுநகர் ,#மதுரை ,#ஈரோடு ,தூத்துக்குடி ,ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மணிக்கு அதிகபட்சமாக 50 கி.மீ வேகம் வரையிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்று வீசக்கூடும்.

#பாம்பன் ,#ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் சுற்றுவட்டப் பகுதிகளில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ முதல் 70 கி.மீ வேகம் வரையிலும்  வீசக்கூடும்

அணைத்து பகுதிகளின் தகவல்களையும் இங்கு ஒரு சேர பதிவிடுவது கடினம் ஆகையால் உங்கள் பகுதியில் நிலையை அறிய விருப்பினால் உங்கள் ஊரின் பெயரை Comment செய்யுங்கள் நான் பதில் வழங்குகிறேன்.

அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...