தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

10-06-2019 ஆகிய இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்

10-06-2019 நேரம் காலை 10:10 மணி நேற்று தென்கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவுகள் அருகே நிலைகொண்டிருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நான் முன்பு பதிவிட்டு இருந்ததை போல தற்பொழுது தீவிரமடைந்து வருகிறது இன்றும் காலை 8:00 மணி வாக்கில் அதனுடைய அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு கிட்டத்தட்ட 55 கி.மீ என்கிற அளவில் இருந்தது.இதன் வாயிலாக அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) உருவெடுத்ததை அறிய முடிகிறது அடுத்த சில மணி நேரங்களில் இது தொடர்பான அறிக்கை வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து வெளியாகலாம்.அது வட-வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு புயலாக உருவெடுக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது அவ்வாறு அது ஒரு புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் அதற்கு இம்முறை இந்திய நாட்டின் தேர்வு சொல்லான #வாயு (#VAYU) என்ற பெயர் சூட்டப்படும்.இது தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் நமது YOUTUBE பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
 
கடந்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி ,#நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் ஆங்காங்கே நல்ல மழை பதிவாகியுள்ளது மேலும் நான் நேற்றைய எனது குரல் பதிவில் குறிப்பிட்டு இருந்த அந்த ஈரோடு மாவட்டம் #கொடுமுடி சுற்றுவட்டப் பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகியுள்ளது கிட்டத்தட்ட 39 மி.மீ அளவு மழை அப்பகுதிகளில் பதிவாகியுள்ளது.

10-06-2019 ஆகிய இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்

#குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 74 மி.மீ
#சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 65 மி.மீ
#கழியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 53 மி.மீ
#சித்தாறு I (கன்னியாகுமரி மாவட்டம் ) - 49 மி.மீ
#இரணியல்  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 49 மி.மீ 
#சிவலோகம் -சித்தாறு II  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 46 மி.மீ
#தக்கலை  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 43 மி.மீ
#கொடுமுடி (ஈரோடு மாவட்டம் ) - 39 மி.மீ
#கன்னிமார்  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 37 மி.மீ 
#பேச்சிப்பாறை  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 33 மி.மீ
#கொட்டாரம்  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 27 மி.மீ 
#மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 27 மி.மீ 
#பூதப்பாண்டி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 26 மி.மீ 
#பெருஞ்சாணி  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 25 மி.மீ
#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 25 மி.மீ
#குளச்சல்  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 25 மி.மீ
#மேல்பவானி (நீலகிரி மாவட்டம் ) - 25 மி.மீ
#ராதாபுரம் (நெல்லை மாவட்டம் ) - 17 மி.மீ
#மூலனூர் (திருப்பூர் மாவட்டம் ) - 16 மி.மீ
#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 13 மி.மீ
#சேரன்மாதேவி(நெல்லை மாவட்டம் ) - 12 மி.மீ
#செங்கோட்டை (நெல்லை மாவட்டம் ) - 12 மி.மீ
#கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
#நாகர்கோயில்  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ
#புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம் ) - 8 மி.மீ
#தென்காசி (நெல்லை மாவட்டம் ) - 7 மி.மீ
#மணிமுத்தாறு (நெல்லை மாவட்டம் ) - 7 மி.மீ
#தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 7 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...