தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

10-06-2019 அரபிக்கடல் பகுதியில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் | (VAYU ) வாயு புயல் உருவாக வாய்ப்பு |கடந்த 24 மணி நேரத்தில் கேரளா மற்றும் இலங்கையில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகள்

10-06-2019 நேரம் பிற்பகல் 2:05 மணி இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது (Depression) தற்பொழுது மேலும் தீவிரமடைந்து ஒரு ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) என்கிற நிலையில் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் லட்சதீவுகள் தலைநகர் கவரட்டிக்கு வட -வட மேற்கு திசையிலும் #மங்களூர் பகுதிக்கு கிட்டத்தட்ட 400 கி.மீ வட மேற்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது.அது மேலும் தீவிரமடைந்து அடுத்த சில மணி நேரங்களில் #வாயு (#VAYU) புயலாக அரபிக்கடல் பகுதியில் உருவெடுக்கலாம்.அடுத்த சில மணி நேரங்களில் அது வட -வட மேற்கு திசையில் நகர முற்படலாம் அதே சமயம் 11-06-2019 ஆகிய நாளை அது அதன் திசையை மாற்றிக்கொண்டு வட -வட கிழக்கு திசையில் கர்நாடக மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களின் கடலோர பகுதிகளுக்கு மேற்கே கடல் பகுதிகளில் நகர்ந்து செல்ல வாய்ப்புகள் உள்ளது இதன் காரணமாக நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல 11-06-2019 ஆகிய நாளை கர்நாடகா மற்றும் #மஹாராஷ்டிர மாநிலங்களின் கடலோர பகுதிகளிலும் ஆங்காங்கே வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அது மேலும் நகர்ந்து 12-06-2019 அல்லது 13-06-2019 ஆம் தேதி வாக்கில் குஜராத் மாநிலத்தின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம்.அது ஒரு புயலாக உருவெடுத்ததும் அதன் நகர்வுகள் தொடர்பாக மீண்டும் நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.

10-06-2019 ஆகிய இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவான சில பகுதிகளின் நிலவரம் .


 பிரவோம் - #PIRAVOM (எர்ணாகுளம் மாவட்டம் ) - 142 மி.மீ
#நெடுமங்காடு  - #NEDUMANGAD (திருவனந்தபுரம் மாவட்டம் ) - 116 மி.மீ
#சேர்தலா -#CHERTHALA (ஆலப்புழா மாவட்டம் ) - 110 மி.மீ
#ஆலப்புழா -#ALAPPUZHA (ஆலப்புழா மாவட்டம் ) - 106 மி.மீ
மான்கொம்பு - #MANCOMBU  (ஆலப்புழா மாவட்டம் ) - 104 மி.மீ


10-06-2019 ஆகிய இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவான சில பகுதிகளின் நிலவரம் .

#வேவழ்தலாவ (#Wevalthalawa ) - 130 மி.மீ

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை அளவுகள் தொடர்பாக ஏற்பகனவே இதற்கு முந்தைய பதிவில் இன்று காலை பதிவிட்டு உள்ளேன்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி #வாயு புயலாக உருவெடுத்ததும் மீண்டும் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...