தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

12-06-2019 மிக தீவிர புயலாக உருவெடுத்த வாயு | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

12-06-2019 நேரம் காலை 10:50 மணி நேற்று கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த அந்த தீவிர புயலான "#வாயு " (#VAYU) மேலும் வலுப்பெற்று இன்று அதிகாலை ஒரு மிக தீவிர புயல் (Very Severe Cyclone) என்கிற நிலையை எட்டியது.சற்று முன்பு அதாவது இன்று காலை 8:00 மணி வாக்கில் அந்த மிக தீவிர புயலான (Very Severe Cyclone)  "#வாயு " (#VAYU) கிட்டத்தட்ட Latitude 18°N மற்றும் Longitude 70°E இல் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்தது.இது கிட்டத்தட்ட #மும்பை க்கு 350 கி.மீ மேற்கு என்று சொல்லலாம்.மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அது மேலும் வட -வட மேற்கு திசையில் நகர்ந்து 13-12-2019 ஆகிய நாளை #குஜராத் மாநிலத்தின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் குறிப்பாக #veraval  ,#kodinar பகுதிகளை நெருங்கி பின்னர் அவை குஜராத்தின் கடலோர பகுதிகளை ஒட்டியே நகர்ந்து செல்ல முற்படலாம் அதன் காரணமாக #mangrol , #keshad ,##kadach ,#போர்பந்தர் (#porbandar) ,#sishli ,#bhatia ,#Dwarka உட்பட அம்மாநிலத்தின் அநேக மேற்கு கடலோர பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை 13-06-2019 மற்றும் 14-06-2019 ஆம் தேதிகளில் பதிவாக வாய்ப்புகள் உள்ளது.மேலும் அது குஜராத்தின் கடலோர பகுதிகளை நெருங்குகையில் அப்பகுதிகளில் மணிக்கு அதிகபபட்சமாக 150 கி.மீ முதல் 160 கி.மீ வரையில் காற்று வீசக்கூடும்.

 12-06-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 103 மி.மீ 
#கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 67 மி.மீ 
#மேல்பவானி - #UPPERBHAVANI (நீலகிரி மாவட்டம் ) - 58 மி.மீ 
#வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 57 மி.மீ 
#சின்கோனா (கோவை மாவட்டம் ) - 49 மி.மீ 
#சின்னக்கல்லாறு  (கோவை மாவட்டம் ) - 44 மி.மீ 
#அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 38 மி.மீ  
#வால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 37 மி.மீ 
#வால்பாறை தாலுக்கா அலுவலகம்  (கோவை மாவட்டம் ) - 35 மி.மீ 
#நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 33 மி.மீ
#நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 32 மி.மீ 
#சித்தாறு I (கன்னியாகுமரி மாவட்டம் ) - 26 மி.மீ
#தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 24 மி.மீ 
#மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 24 மி.மீ 
#ராதாபுரம் (நெல்லை மாவட்டம் ) - 23 மி.மீ   
#கிளண்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 23 மி.மீ 
#கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 23 மி.மீ
#குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 22 மி.மீ 
#கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 22 மி.மீ  
#பெரியார் (தேனி மாவட்டம் ) - 21 மி.மீ  
#தொட்டபெட்டா ,உதகை  (நீலகிரி மாவட்டம் ) - 18 மி.மீ 
#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 16 மி.மீ
#சிவலோகம் -சித்தாறு II (கன்னியாகுமரி மாவட்டம் ) - 14 மி.மீ 
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ 
#சுரளகோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ
#எமரால்ட்  (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ 
#செங்கோட்டை (நெல்லை மாவட்டம் ) - 12 மி.மீ  
#பொள்ளாச்சி  (கோவை மாவட்டம் ) - 10 மி.மீ 

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.தமிழகத்தில் இன்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...