தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

21-06-2019-தமிழகம் மற்றும் புதுச்சேரியின் இன்றைய வானிலை | தென்மேற்கு பருவமழை

21-06-2019 நேரம் காலை 10:45 மணி நான் நேற்று பதிவிட்டு இருந்தது போல தற்பொழுது கேரளாவில் தென்மேற்கு பருவகாற்று வீரியம் அடைய தொடங்கியுள்ளது குறிப்பாக தற்சமயம் #கண்ணூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வடக்கு கேரள கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே வலுவான மழை மேகங்கள் ராடாரில் பதிவாகி வருவதை அறியமுடிகிறது .தற்போது ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது இது மேற்கு திசையில் இருக்கும் காற்றை அதன் வசம் இழுப்பதால் தென்மேற்கு பருவகாற்றின் வீரியம் அதிகரித்துள்ளது இதன் காரணமாக கேரளாவில் தென் மேற்கு பருவமழையும் வீரியம் பெற தொடங்கியுள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வட மேற்கு திசையில் நிலப்பகுதிக்குள் நகர்ந்து சென்று வடக்கு கேரளா மற்றும் தெற்கு கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களில் மழை பொழிவை அதிகரிக்க எதுவாக அமைகிறது.

21-06-2019 இன்று காலை 8:30 மணிவரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 4 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 86 மி.மீ

#பரங்கிமலை- சென்னை (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 29 மி.மீ

#கோலப்பாக்கம் ARG (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 26 மி.மீ

#பூணமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 21 மி.மீ

#வால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 16 மி.மீ

#சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 16 மி.மீ

#காரையூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 15 மி.மீ

#வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 14 மி.மீ

#தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 13 மி.மீ

#நத்தம் (திண்டுக்கல் மாவட்டம் ) - 12 மி.மீ

#கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 10 மி.மீ

#சின்கோனா (கோவை மாவட்டம் ) - 10 மி.மீ

#சின்னக்கல்லாறு  (கோவை மாவட்டம் ) - 10 மி.மீ

#கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ

#பெரியார் (தேனி மாவட்டம் ) - 8 மி.மீ

#உளுந்தூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 8 மி.மீ

#செம்பரம்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 5 மி.மீ

#ஊத்துக்கோட்டை  (திருவள்ளூர் மாவட்டம் ) - 5 மி.மீ

#பள்ளிப்பட்டு  (திருவள்ளூர் மாவட்டம் ) - 5 மி.மீ

#ஜமீன்கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம் ) - 4 மி.மீ

#ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 4 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...