தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

22-06-2019-தென்மேற்கு பருவமழை -இன்றைய மழை வாய்ப்புகள்

22-06-2019 நேரம் காலை 10:40 மணி நேற்று ஓடிசாவை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நான் நேற்றைய எனது பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல வட மேற்கு திசையில் நகர்ந்து தற்சமயம் நிலப்பகுதியில் நிலைகொண்டுள்ளது இதன் காரணமாக ஒடிசா ,சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சில பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை வீரியம் அடைந்துள்ளது.கேரளா மற்றும் தெற்கு கர்நாடக மாநில பகுதிகளிலும் இன்று ஆங்காங்கே வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இன்று சில இடங்களில் நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக #நீலகிரி மாவட்ட மேற்கு பகுதிகளில் மற்றும் #வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகளில் ஆங்காங்கே வலுவான மழை பதிவாகவும் வாய்ப்புகள் உள்ளது.கோவை ,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் சில பகுதிகளில் அவ்வப்பொழுது லேசான சாரல் அல்லது தூறல் பதிவாகலாம்.பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம்.

22-06-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.


#அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 58 மி.மீ

#தேவாலா  (நீலகிரி மாவட்டம் ) - 43 மி.மீ

#மேல்பவானி (நீலகிரி மாவட்டம் ) - 28 மி.மீ

#பெரியார் (தேனி மாவட்டம் ) - 22 மி.மீ

#நடுவட்டம்  (நீலகிரி மாவட்டம் ) - 20 மி.மீ

#தேக்கடி (தேனி மாவட்டம் ) - 19 மி.மீ

#வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 19 மி.மீ

#கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ

#குன்னூர்  (நீலகிரி மாவட்டம் ) - 11 மி.மீ

#குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ

#கோத்தகிரி  (நீலகிரி மாவட்டம் ) - 8 மி.மீ

#கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம் ) - 7 மி.மீ

#பர்லியாறு  (நீலகிரி மாவட்டம் ) - 5 மி.மீ

#பேச்சிப்பாறை  (கன்னியாகுமரி மாவட்டம் )- 5 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...