தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

23-06-2019-தமிழகம் மற்றும் புதுச்சேரியின் இன்றைய வானிலை | தென்மேற்கு பருவமழை | மழை அளவுகள்

23-06-2019 நேரம் காலை 11:30  மணி நான் இதற்கு முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது போல இன்று #கர்நாடகா மாநிலத்தின் வடக்கு பகுதிகள் , #கோவா மற்றும் #தெலுங்கானா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மேலும் வீரியம் பெறலாம்.மேலும் திருவள்ளூர் மாவட்டத்தை ஒட்டியிருக்கும் திருப்பதி , #நெல்லூர் உட்பட தெற்கு ஆந்திர மாவட்டங்களில் இன்றும்  வெப்பசலன மழை மேகங்கள் குவிய வாய்ப்புகள் உள்ளது.அதேபோல இன்றும் #கர்நாடக மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே நல்ல மழை பதிவாகலாம்.

23-06-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவாகிய மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி .மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 40 மி.மீ
#தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 37 மி.மீ
#சோலையாறு அணை (கோவை மாவட்டம் ) - 36 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 34 மி.மீ
#மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 25 மி.மீ
#பெரம்பிகுளம் (கோவை மாவட்டம் ) - 23 மி.மீ
#காஞ்சிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 20 மி.மீ
#குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 16 மி.மீ
#தாம்பரம்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 15 மி.மீ
#திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம் ) - 14 மி.மீ
#அரக்கோணம் (வேலூர் மாவட்டம் ) - 14 மி.மீ
#ஸ்ரீபெரம்பத்தூர்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 13 மி.மீ
#தரமணி ARG சென்னை (சென்னை மாவட்டம் ) - 13 மி.மீ 
#தொன்டையார்பேட்டை - CD மருத்துவமனை ,சென்னை (சென்னை மாவட்டம் ) - 12 மி.மீ
#மீனம்பாக்கம்-#சென்னை விமான நிலையம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 11 மி.மீ
#ஆலந்தூர் , சென்னை (சென்னை மாவட்டம் ) - 11 மி.மீ
#காட்பாடி (வேலூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#பெரியார் (தேனி மாவட்டம் ) - 11 மி.மீ
#காவிரிப்பாக்கம் (வேலூர் மாவட்டம் ) - 10 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ
#புழல் (திருவள்ளூர் மாவட்டம் ) - 10 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...