தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

24-06-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

24-06-2019 நேரம் காலை 10:50 மணி நான் இதற்கு முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது போல இன்று #மும்பை உட்பட #மஹாராஷ்டிர மாநில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையலாம் குறிப்பாக #மும்பையின் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேபோல் இன்று #கர்நாடகா மற்றும் #கோவா மாநிலங்களிலும் சில இடங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு தென்மேற்கு பருவமழை பதிவாகலாம்.நேற்றை போலவே இன்றும் கர்நாடக மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் நல்ல மழை பதிவாகலாம்.

இன்றும் தமிழக பகுதிகளை ஒட்டியிருக்கும் தெற்கு ஆந்திர மாநில பகுதிகளில் பிற்பகல் வாக்கில் மழை மேகங்கள் குவிய வாய்ப்புகள் உள்ளது.மேலும் கேரளாவில் தற்சமயம் தென்மேற்கு பருவமழை வீரியம் குன்றி இருப்பதால் தமிழகத்தில் இன்றும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக வட மற்றும் வட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.


24-06-2019 இன்று காலை 8:30 மணிவரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#சோலிங்கூர் (வேலூர் மாவட்டம் ) - 41 மி.மீ
#திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம் ) - 39 மி.மீ
#வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 34 மி.மீ
#R.K.பேட் (திருவள்ளூர் மாவட்டம் ) - 31 மி.மீ
#அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 23 மி.மீ
#காவிரிப்பாக்கம்  (வேலூர் மாவட்டம் ) - 21 மி.மீ
#கலசப்பாக்கம்  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 20 மி.மீ
#ஆற்காடு  (வேலூர் மாவட்டம் ) - 19 மி.மீ
#தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 19 மி.மீ
#பாலாறு பாலம் , #வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 18 மி.மீ
#கும்மிடிப்பூண்டி  (திருவள்ளூர் மாவட்டம் ) - 17 மி.மீ 
#பெரியார் (தேனி மாவட்டம் ) - 16 மி.மீ
#போளூர்  (திருவண்ணாமலை மாவட்டம் ) - 15 மி.மீ
#வல்லம் - #தீவனூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 15 மி.மீ
#திருத்தணி PTO (திருவள்ளூர் மாவட்டம் ) - 14  மி.மீ
#சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம் ) - 14 மி.மீ
#அரக்கோணம்  (வேலூர் மாவட்டம் ) - 13 மி.மீ
#மீனம்பாக்கம் விமான நிலையம் -#சென்னை (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 11 மி.மீ
#ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#பொன்னேரி  (திருவள்ளூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#பெருங்களத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 10 மி.மீ
#வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 10 மி.மீ
#செஞ்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 10 மி.மீ
#ஓசூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
#மதுராந்தகம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 9 மி.மீ
#ஆனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 9 மி.மீ

புதுவை மாநிலம்
---------------------------
#பெரியகாலாபேட் (புதுச்சேரி மாவட்டம் ) - 14 மி.மீ
#புதுச்சேரி AWS (புதுச்சேரி மாவட்டம் ) - 12 மி.மீ

அனைவருக்கும் ஏன்னுடைய காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...