தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

25-06-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்

25-06-2019 நேரம் காலை 10:40 மணி நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல இன்று குஜராத் மாநிலத்தின் தெற்கு பகுதிகளிலும் ஆங்காங்கே பரவலான மழை பதிவாக தொடங்கலாம்.அதேபோல ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் இன்று ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்றைய வானிலையே தொடரும்.இன்றும் திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர பகுதிகளில் காற்று குவியலாம் இதன் காரணமாக திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழை வாய்ப்புகள் உருவாகலாம்.இது தொடர்பாக இன்றும் நிகழ் நேரத்தில் பதிவிடுகிறேன்.நேற்றை போலவே உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

25-06-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான அந்த மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 67 மி.மீ
#செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 41 மி.மீ
#உளுந்தூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 41 மி.மீ
#திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 37 மி.மீ
#பண்ருட்டி (கடலூர் மாவட்டம் ) - 29 மி.மீ
#ஸ்ரீபெரம்பத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 28 மி.மீ
#வனமாதேவி (கடலூர் மாவட்டம் ) - 26 மி.மீ
#புதுவேட்டக்குடி (பெரம்பலூர் மாவட்டம் ) - 25 மி.மீ
#போளூர் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 24 மி.மீ
#பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 23 மி.மீ
#விருகாவூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 22 மி.மீ
#தியாகதுர்கம்  (விழுப்புரம் மாவட்டம் ) - 22 மி.மீ
#அண்ணாபல்கலைக்கழகம்  (சென்னை மாநகராட்சி ) - 21 மி.மீ
#எம்.ஜீ.ஆர் மார்க்கெட் , அசோக்நகர் (சென்னை மாநகராட்சி ) - 20 மி.மீ
#செம்பரம்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 20 மி.மீ
#கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 19 மி.மீ
#வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 14 மி.மீ
#குன்னூர் PTO (நீலகிரி மாவட்டம் ) - 18 மி.மீ
#மேட்டூர் (சேலம் மாவட்டம் ) - 17 மி.மீ
#சோலையாறு (கோவை மாவட்டம் ) - 16 மி.மீ
#கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 15 மி.மீ
#தனிஷ்பேட்டை (சேலம் மாவட்டம் ) - 15 மி.மீ
#கிருஷ்னகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
#செந்துறை (அரியலூர் மாவட்டம் ) - 11 மி.மீ
#குடவாசல் (திருவாரூர் மாவட்டம் ) - 10 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 10 மி.மீ
#நெல்லிக்குப்பம் (கடலூர் மாவட்டம் ) - 10 மி.மீ
#ஜமீன்கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம் ) - 10 மி.மீ
#சிவகங்கை (சிவகங்கை மாவட்டம் ) - 10 மி.மீ
#திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம் ) - 9 மி.மீ
#தேவாலா  (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ
#தொழுதூர் (கடலூர் மாவட்டம் ) - 9 மி.மீ
#காளையநல்லூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 9 மி.மீ
#புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம் ) - 9 மி.மீ

அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


 

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...