தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

27-06-2019 அடுத்து வரக்கூடிய நாட்களில் வானிலை எப்படி இருக்கலாம் ?

27-06-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ? 

27-06-2019 நேரம் இரவு 11:40 மணி நான் இதற்கு முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது போல 30-06-2019 ஆம் தேதி வாக்கில் அதாவது 30-06-2019 அல்லது 01-07-2019 ஆம் தேதி வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளது.அதேபோல #மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட மஹாராஷ்டிர , #கோவா மற்றும் வடக்கு கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் ஆங்காங்கே பரவலான வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.மேலும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் கிட்டத்தட்ட 02-06-2019 ஆம் தேதி வாக்கில் ஒடிசா மாநிலத்தில் நுழைந்து மேற்கு - வட மேற்கு திசையில் நிலப்பகுதியில் நகர்ந்து செல்லலாம் இதன் காரணமாக அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் #சத்தீஸ்கர் , #மத்தியபிரதேசம்  ,#ஒடிசா ,#தெலுங்கானா மற்றும் #மஹாராஷ்டிர மாநிலத்தின் கிழக்கு பகுதிகளிலும் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.அடுத்து வரக்கூடிய நாட்களில் மும்பை முதல் மங்களூரு வரையிலான அதன் இடையில் உள்ள இந்தியாவின் மேற்கு கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையலாம்.

 தற்பொழுது  மாலை மற்றும் இரவு நேரங்களில் தமிழகத்தின் பல இடங்களிலும் காற்றின் வேகம் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.குறிப்பாக இன்று தென்கடலோர பகுதிகளிலும் நாகை மற்றும் காரைக்கால் மாவட்டத்திலும் காற்றின் வேகம் சற்று அதிகரித்து இருந்தது அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் அநேக பகுதிகளிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கலாம்.காற்றின் வேக மாறுபாடு எந்தெந்த பகுதிகளில் எந்த அளவு வேகம் வரையிலும் அதிகப்பட்சமாக காற்று வீச வாய்ப்புகள் உள்ளது என்பது தொடர்பாக அவ்வப்பொழுது நமது பக்கத்தில் அடுத்து வரக்கூடிய நாட்களில் பதிவிடுகிறேன்.

இன்று வேலூர் , காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் விழுப்புரம் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளிலும் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவானது 28-06-2019 ஆகிய நாளையும் தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.பொதுவாக 29-06-2019 தேதி முதல் தமிழகத்தில் வெப்பசலன மழை குறைய வாய்ப்புகள் உள்ளது.அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கம் குறைந்த பின்னர்  அடுத்து பிறக்க இருக்கும் மாதமான ஜூலை முதல் வாரத்தின் மத்தியில் தமிழகத்தில் அங்கும் இங்குமாக இடியுடன் கூடிய வெப்பசலன மழை உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

ஜூலை முதல் வாரத்தில் நீலகிரி மாவட்டம் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே அவ்வப்பொழுது நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.கேரளாவிலும் வடக்கு பகுதிகளில் மழையின் அளவு சற்று அதிகரிக்கலாம்.


நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை உள்ளடிக்கிய ஒரு கணிப்புதான்.இதில் மாற்றங்கள்  ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...