தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

30-06-2019 இன்றைய வானிலை | குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள்

30-06-2019 நேரம் பிற்பகல் 2:30 மணி நாம் எதிர்பார்த்ததைப் போல இன்று அதிகாலை வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்ததை செயற்கைகோள்  படங்களின் உதவியுடன் தெளிவாக அறிய முடிந்தது தற்பொழுதும் அது மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.நான் கடந்த பதிவுகளில் தெரிவித்து இருந்தது போல அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவின் கடலோர பகுதிகளை நாளை கடந்து பின்னர் அது நிலப்பகுதிகளிலேயே மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு பிறகு அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  (Depression ) என்கிற நிலையை நிலப்பகுதியிலேயே அதாவது 03-06-2019 அல்லது  04-006-2019 ஆம் தேதி வாக்கில் கிட்டத்தட்ட மத்தியபிரதேசம் மற்றும் அதனை ஒட்டியிருக்கக் கூடிய கிழக்கு மகாராஷ்டிர மாநில பகுதிகளின் அருகே உருவெடுக்கலாம்.இதன் காரணமாக  ஜூலை 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் ஒடிசா மாநிலத்திலும் 02-07-2019 ஆம் தேதி அன்று சட்டிஸ்கர் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களிலும் மஹாராஷ்டிர மாநிலத்தின் கிழக்கு பகுதிகளிலும் தெலுங்கான மற்றும் ஆந்திர வடக்கு பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அதன் நகர்வுகள் தொடர்பாக அவ்வப்பொழுது நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.

தமிழகத்தை பொறுத்தவரையில் 02-07-2019 அதாவது ஜூலை 2 ஆம் தேதி அன்று #நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் #வால்பாறை உட்பட கோவை மாவட்ட பகுதிகளிலும் கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் சற்று வலுவான மழை பதிவாகலாம் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழக மேற்கு தோடர்ச்சி மலை பகுதிகளில் அங்கும் இங்குமாக நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.மேலும் ஜூலை முதல் வாரத்தின் மத்தியில் தமிழகத்தில் மீண்டும் அங்கும் இங்குமாக வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.






பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...