தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

01-07-2019 நேரம் பிற்பகல் 1:45 மணி நேற்று வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாணம் எதிர்பார்த்ததை போலவேசற்று வலுப்பெற்று ஒரு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (Well Marked Low Pressure Area) என்கிற நிலையில் தற்பொழுது வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.இதன் காரணமாக தற்சமயம் ஒடிசா மாநில பகுதிகள் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் ஆங்காங்கே சற்று வலுவான மழை சில இடங்களில் பதிவாகி வரலாம்.நான் முன்பு பதிவிட்டு இருந்ததை போல இன்றும் #மும்பை மாநகரின் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட மகாராஷ்டிர மாநில பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் மேலும் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் வடக்கு பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.கடந்த 24 மணி நேரத்தில் #மும்பை மாநகர் #SANTACRUZ பகுதியில் கிட்டத்தட்ட 92 மி.மீ அளவு மழையும் #மும்பை COLABA பகுதியில் 93 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.அதேபோல் #குஜராத் மாநிலம் #சூரத் பகுதியில் கிட்டத்தட்ட 192 மி.மீ அளவு மழையும் #VALSAD பகுதியில் 278 மி.மீ அளவு மழையும் பதிவாகியள்ளது.நான் முன்பு பதிவிட்டு இருந்ததைப்போல அடுத்து வரக்கூடிய நாட்களில் அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு வட மேற்கு திசையில் நிலப்பகுதிகளிலேயே நகர்ந்து செல்லலாம்.


01-07-2019 கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகிய மழை அளவுகளின் படி தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 8 மி.மீ
#அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 5 மி.மீ
#பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம் ) - 3 மி.மீ
#மேல்பவானி (நீலகிரி மாவட்டம் ) - 2 மி.மீ

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...