தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

03-07-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ?

03-07-2019 நேரம் இரவு 9:25 மணி தற்பொழுது அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மத்திய பிரதேச மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் மேற்கு நோக்கி நகர வாய்ப்புகள் உள்ளது இதன் காரணமாக நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல 04-07-2019 ஆகிய நாளை மற்றும் 05-07-2019 ஆகிய நாளை மறுநாள் #மும்பை மாநகர் உட்பட அதன் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது 06-07-2019 ஆம் தேதி வரையிலும் முன்பை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட மஹாராஷ்டிர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களிலும் #கோவா மாநிலம் உட்பட அதனை ஒட்டியிருக்க கூடிய கர்நாடக மாநில பகுதிகளிலும் ஆங்காங்கே வலுவான தென்மேற்கு பருவ மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இவை தவிர்த்து கேரள மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் அவ்வப்பொழுது மழை பதிவாகலாம்.மேலும் 05-07-2019 ஆம் தேதி வாக்கில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வட கிழக்கு திசையில் நிலப்பகுதிக்குள் நகர முற்பட வாய்ப்புகள் உள்ளது இதன் காரணமாக வடக்கு மத்திய பிரதேச பகுதிகளில் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் ஆங்காங்கே கனமழை பதிவாகலாம்.மேலும் 08-07-2019 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை #உத்திரப்பிரதேசம் , #பூட்டான் ,#நேபால் ,#அஸ்ஸாம் மாநிலத்தின் வடக்கு பகுதிகள் உட்பட இமயமலை அடிவார பகுதிகளில் தீவிரமடைய தொடங்கலாம் இதன் காரணமாக அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அதவாது 09-07-2019 முதல் அதற்கு அடுத்துவரக்கூடிய நாட்களில் இமயமலையை ஒட்டியிருக்கும் உத்திரபிரதேசம் ,#உத்திரகாண்ட ,#ஹிமாச்சலபிரதேசம் மாநிலங்கள் உட்பட இமயமலையை ஒட்டியிருக்கும் பல இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பதிவாகலாம்.பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இமயமலையை ஒட்டியிருக்கும் அப்பகுதிகளுக்கும் அம்மாநிலங்களுக்கும் சுற்றுலா செல்வோர் அதனை அடுத்து வரக்கூடிய வாரத்தில் தவிர்ப்பது நல்லது மேலும் அங்கு சுற்றுலா சென்றிருப்போர் அடுத்த 4 நாட்களுக்குள் வீடு திரும்பிவிடுவது மிகவும் நல்லது.பொதுவாக தென்மேற்கு பருவமழை இமயமலையை ஒட்டியிருக்கும் பகுதிகளில் தீவிரமடைகையில் தமிழகத்திலும் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்கும்.இந்த காலகட்டத்தை பருவமழை முறிவு (இடைவெளி) காலகட்டம் என்று வழங்கலாம் (#Break_Monsoon) இந்த காலகட்டத்தில் நாட்டின் பிற பல்வேறு மாநிலங்களிலும் பருவமழை வீரியமற்று இருக்கும்.


அதன்படி  09-07-2019 அல்லது 10-07-2019 ஆம் தேதி முதல் அதற்கு அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட தமிழக வட கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய பரவலான வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...