தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

04-07-2019 இன்றைய வானிலை | இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்து வரக்கூடிய நாட்களில் கனமழை பதிவாக வாய்ப்புகள் |கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகிய மழை அளவுகள்

04-07-2019 நேரம் காலை 11:35 மணி இன்று தமிழக உள் மாவட்டங்களில் அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான அளவு வெப்பசலன மழை பதிவாகலாம்.இது தொடர்பாக நிகழ் நேரத்தில் ஒரு முறை பதிவிடுகிறேன்.பொதுவாக ஆங்காங்கே சில இடங்களில் சாரல் மழை தூறல் பதிவாகலாம்.

மேலும் நான் நேற்று இரவு அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் குறிப்பிட்டு இருந்தது போல இமயமலை பகுதியை ஒட்டியிருக்கும் #உத்திரபிரதேசம் (#uttarpradesh)  , #உத்திராஞ்சல் (uttaranchal), #ஹிமாச்சலபிரதேசம்(#himachal) ,பீஹார் (#Bihar) , மேற்குவங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களின் வடக்கு பகுதிகள் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் 08-07-2019 ஆம் தேதி வாக்கில் பருவமழை வீரியம் அடைய தொடங்கலாம் இதன் காரணமாக மாநிலங்களின் பல இடங்களிலும் குறிப்பாக இமயமலையை ஒட்டியிருக்கும் பகுதிகளில் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அதாவது 09-07-2019 ஆம் தேதி முதல் மிக கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.ஒவ்வொரு ஆண்டும் பல மாநிலங்களில் இருந்து அப்பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் மக்கள் இதைப்போன்ற தருணங்களில் சிக்கி கொள்கின்றனர்.உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது அப்படி இருந்தால் அடுத்த சில நாட்களில் சுற்றுலா அல்லது ஆன்மிக பயணத்தை முடித்துக்கொண்டு உடனே வீடு திரும்பும்படி அறிவுறுத்துங்கள்.நம்மால் முடிந்த வரையில் பாதிப்புகளை குறைக்கலாம்.நேபாளம் ,பூட்டான் போன்ற நாடுகளுக்கும் இது அடங்கும்.

04-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 47 மி.மீ
தேவாலா  (நீலகிரி மாவட்டம் ) - 25 மி.மீ
#சோலையாறு (கோவை மாவட்டம் ) - 18 மி.மீ
#UPPER_BHAVANI (நீலகிரி மாவட்டம் ) - 18 மி.மீ
#வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 17 மி.மீ
#சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 12 மி.மீ
#பெரியார் (தேனி மாவட்டம் ) - 11 மி.மீ
#அவலாஞ்சி  (நீலகிரி மாவட்டம் ) - 9 மி.மீ 

அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கங்களை  தெரிவித்து கொள்கிறேன்.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...