தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

06-07-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்

06-07-2019 நேரம் காலை 11:05 மணி கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சற்று வலுவான மழை பதிவாகியுள்ளது நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதியான #அவலாஞ்சி சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 154 மி.மீ அளவு மழை கடந்த 24 மணி நேரத்தில் பதவியாகியுள்ளது.இன்றும் #வயநாடு உட்பட கேரளா மாநிலத்தின் வடக்கு மலை பகுதிகளில் ஆங்காங்கே சற்று வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இவைதவிர்த்து மும்பை மாநகரின் புறநகர் பகுதிகள் உட்பட சூரத் முதல் கோழிக்கோடு வரையிலான கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் சற்று வலுவான மழை பதிவாகலாம்.மேலும் நான் முன்பே கூறியிருந்தது போல நாளை முதல் இமயமலையை ஒட்டியிருக்கும் மாநிலங்களில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் 09-07-2019 மற்றும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் உத்திரப்பிரதேசம் ,உதித்திராஞ்சல் உட்பட இமயமலையை ஒட்டியிருக்கும் மாநிலங்களில் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பதிவாகலாம்.தமிழகத்தை பொறுத்தவரையில் இன்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.ஓசூர் உட்பட கிருஷ்னகிரி மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் 5 மி.மீ க்கும் குறைவான அளவு மழை பதிவாகியுள்ளது.

08-07-2019 அல்லது 09-07-2019 ஆம் தேதி முதல் தமிழகத்தின் உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை அங்கும் இங்குமாக பதிவாக தொடங்கலாம்.

06-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 154 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 72 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம் ) - 67 மி.மீ
#UPPER_BHAVANI (நீலகிரி மாவட்டம் ) - 54 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 45 மி.மீ
கூடலூர்பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 41 மி.மீ
எமரால்டு  (நீலகிரி மாவட்டம் ) - 41 மி.மீ
#பெரம்பிகுளம் (கோவை மாவட்டம் ) - 40 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம் ) - 36 மி.மீ
#சோலையாறு (கோவை மாவட்டம் ) - 36 மி.மீ
நடுவட்டம்  (நீலகிரி மாவட்டம் ) - 25 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம் ) - 14 மி.மீ
பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 12 மி.மீ
பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ
சுரலக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 11 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம்(கோவை மாவட்டம் ) - 10 மி.மீ
நாகர்கோயில் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...