தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

11-07-2019 நேரம் காலை 10:45 மணி இன்றும் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம் மேலும் 13-07-2019 ஆம் தேதி அல்லது 14-07-2019 ஆம் தேதி வாக்கில் மீண்டும் தமிழகத்தில் பதிவாகும் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்கலாம்.சென்னை ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் , புதுச்சேரி ,விழுப்புரம் , கடலூர் உட்பட வட கடலோர மாவட்டங்களிலும் வேலூர் ,திருவண்ணாமலை உட்பட வட மற்றும் வட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் பரவலான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அதே போல 13-07-2019 அல்லது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் திருச்சி மாவட்டம்  தஞ்சை உட்பட டெல்டா மற்றும் மத்திய உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில பகுதிகளில் பரவலான மழை பதிவாகலாம்.இது தொடர்பாக அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் பதிவிடுகிறேன்.

11-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

மடம்பூண்டி , கூவனுர் அருகே (விழுப்புரம் மாவட்டம் ) - 62 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 49 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) - 44 மி.மீ
திருபலப்பந்தல் (விழுப்புரம் மாவட்டம் ) - 39 மி.மீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 32 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் மாவட்டம் ) - 32 மி.மீ
நெய்வாசல்தென்பாதி (தஞ்சாவூர் மாவட்டம் ) - 28 மி.மீ
கிட்சிப்பாளையம் ,சேலம் (சேலம் மாவட்டம் ) - 27 மி.மீ
சேலம் (சேலம் மாவட்டம் ) - 26 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 25 மி.மீ
சோலையாறு (கோவை மாவட்டம் ) - 24 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 23 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) - 23 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 23 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 22 மி.மீ
தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர் மாவட்டம் ) - 21 மி.மீ
#தஞ்சை பெரிய கோயில் , தஞ்சை (தஞ்சாவூர் மாவட்டம் ) - 19 மி.மீ
உளுந்தூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 19 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 17 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம் ) - 15 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
ஏத்தாப்பூர் (சேலம் மாவட்டம் ) - 14 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 12 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம் ) - 12 மி.மீ
UPPER_BHAVANI(நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
திருக்கோவிலூர்(விழுப்புரம் மாவட்டம் ) - 11 மி.மீ
சீத்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 11 மி.மீ
கூடலூர் (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
வாலாஜாபாத்  (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 10 மி.மீ
பெரம்பிகுளம் (கோவை மாவட்டம் ) - 10 மி.மீ
ரிஷிவந்தியம்  (விழுப்புரம் மாவட்டம் ) - 9 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம் ) - 9 மி.மீ
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம் )  - 9 மி.மீ

புதுவை மாநிலம்
---------------------------
புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் )  - 17 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...