தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

19-07-2019 இன்றைய வானிலை |கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்

19-07-2019 காலை 10:30 மணி நான் இன்று காலையில் எனது கடந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல இன்றும் கேரள மாநிலத்தில் ஆங்காங்கே கனமழை பதிவாகலாம் தற்பொழுதும் தொடர்ந்து கேரளாவின் கடலோர பகுதிகளில் மழை மேகங்கள் குவிந்து வருகின்றன தற்சமயம் #குருவாயூர் , #KUNNAMKULAM , #ERUMAPETTY , #PERUMANNUR , #CHANGARAMKULAM , #ANAKKARA , #KOTTAKKAL , #KADAMPUZHA , #MALAPPURAM , #KARIPUR , #KODUVALLY சுற்றுவட்டப் பகுதிகளில் மிக வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அப்பகுதிகளில் தற்சமயம் கனமழை பதிவாகி வரலாம்.இது தொடரவும் வாய்ப்புகள் உள்ளது.மேலும் இன்று இதன் பிறகு கேரள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் இன்றும் உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு குறிப்பாக வட கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்றும் நல்ல மழை பதிவாகலாம்.இது தொடர்பாக பிற்பகலில் பதிவிட முயற்சிக்கிறேன்.மேலும் கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் இன்று நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அதே போல தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாகலாம்.

19-07-2019 ஆகிய இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 101 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 92 மி.மீ 
சின்கோனா (கோவை மாவட்டம் ) - 87 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 87 மி.மீ
கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர் மாவட்டம் ) - 77 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 73 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 70 மி.மீ
மணலூர்பேட்டை  (விழுப்புரம் மாவட்டம் ) - 60 மி.மீ
ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம் ) - 52 மி.மீ
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 50 மி.மீ
திருமயம்  (புதுக்கோட்டை மாவட்டம் ) - 49 மி.மீ
அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 48 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம் ) - 46 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம் ) - 44 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 41 மி.மீ
வளவனுர்  (விழுப்புரம் மாவட்டம் ) - 41 மி.மீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம் ) - 40 மி.மீ
கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 40 மி.மீ
குப்பநத்தம் (கடலூர் மாவட்டம் ) - 40 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 38 மி.மீ
மடம்பூண்டி (விழுப்புரம் மாவட்டம் ) - 38 மி.மீ
புதுவேட்டக்குடி (பெரம்பலூர் மாவட்டம் ) - 38 மி.மீ
வேப்பூர்  (கடலூர் மாவட்டம் ) - 37 மி.மீ
அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம் ) - 36 மி.மீ
காட்டுமயிலூர்  (கடலூர் மாவட்டம் ) - 35 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 34 மி.மீ
செஞ்சி  (விழுப்புரம் மாவட்டம் ) - 33 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம் ) - 33 மி.மீ
கீழாநிலை  (புதுக்கோட்டை மாவட்டம் ) - 32 மி.மீ
நகுடி  (புதுக்கோட்டை மாவட்டம் ) - 32 மி.மீ
மணம்பூண்டி  (விழுப்புரம் மாவட்டம் ) - 30 மி.மீ
திருக்கோயிலூர்  (விழுப்புரம் மாவட்டம் ) - 28 மி.மீ
சூலங்குறிச்சி  (விழுப்புரம் மாவட்டம் ) - 27 மி.மீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம் ) - 27 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம் ) - 27 மி.மீ
கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 26 மி.மீ
சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 26 மி.மீ
ஆயிங்குடி  (புதுக்கோட்டை மாவட்டம் ) - 25 மி.மீ
கோழியனுர்  (விழுப்புரம் மாவட்டம் ) - 25 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம் ) - 23 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 23 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளூர் மாவட்டம் ) - 23 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 23 மி.மீ
UPPER BHAVANI (நீலகிரி மாவட்டம் ) - 22 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 22 மி.மீ
முகையூர்  (விழுப்புரம் மாவட்டம் ) - 20 மி.மீ
கூடலார் (தேனி மாவட்டம் ) - 20 மி.மீ
ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை மாவட்டம் ) - 20 மி.மீ

புதுவை மாநிலம்
------------------------------
புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 15 மி.மீ

கேரள மாநிலம்
-----------------------
கோழிக்கோடு  - 146 மி.மீ
KARIPUR விமான நிலையம்  - 118 மி.மீ
CIAL , கொச்சின்  - 116 மி.மீ

தமிழகத்தை பொறுத்தவரையில் நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் பகுதிகளை தவிர்த்து 20 மி.மீ க்கும் குறைவாக பல பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகி உள்ளது.அனைத்து பகுதிகளின் பெயர்களையும் இங்கே குறிப்பிடுவது கடினம்.உங்களுடைய பகுதியின் மழை அளவை அறிய விருப்பினால் உங்களின் ஊரின் பெயரை Comment செய்யுங்கள்.
 


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...