தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

22-07-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள்

22-07-2019 நேரம் காலை 10:45 மணி தற்சமயம் தமிழக வட கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாகி வருகிறது.இன்று அதிகாலை முதல் தமிழக வட கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் மழை மேகங்கள் குவிய தொடங்கின தற்சமயம் புதுச்சேரி , கடலூர்  , காரைக்கால் , நாகை  , காஞ்சிபுரம் ,சென்னை ,திருவள்ளூர் என அநேக கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் அங்கும் இங்குமாக சில இடங்களில் லேசான மழையும் பதிவாகி வருகிறது இன்று காலை 10:20 மணி வாக்கில் பதிவான ராடார் படங்களின் படி #நாகை மாவட்டம் #வேளாங்கண்ணி  , #வேட்டைக்காரனிருப்பு , #வேதாரண்யம் , மற்றும் கோடியக்கரை சுற்றுவட்டப் பகுதிகளிலும் வலு குறைந்த மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதேபோல #மகாபலிபுரம் சுற்றுவட்டப் பகுதிகளில் அங்கும் இங்குமாக சற்று வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதேபோல #கிள்ளை  , #பண்ருட்டி , #நெய்வேலி அருகிலும் #மதுராந்தகம் , #காஞ்சிபுரம் , #வாலாஜாபாத் ,#மறைமலைநகர் அருகிலும் வலுகுறைந்த மழை மேகங்கள் ராடாரில் பதிவாகி வருகின்றன சென்னை மாநகரிலும் #பாலவாக்கம் , #துரைப்பாக்கம் , #சோழிங்கநல்லூர் சுற்றுவட்டப் பகுதிகளில் வலு குறைந்த மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.இவைத்தவிர்த்து #ஜவ்வாதுமலை மற்றும் அதனை ஒட்டியிருக்கக்கூடிய #வேலூர் மாவட்ட மேற்கு பகுதிகளிலும் உள் மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக சிறு சிறு வலு குறைந்த மழை மேகங்கங்ளும் பதிவாகி வருகின்றன.பொதுவாக அந்த பகுதிகளில் சாரல் அல்லது தூரல் பதிவாகி வரலாம்.இதை போன்ற தருணங்களில் வட கடலோர பகுதிகளில் இப்படியான சூழல்கள் நிலவுவது அரிது தான்.

இன்றைய வானிலையை பொறுத்தவரையில் இன்றும் கேரள மாநில #KANNUR , #KASARGOD , #WAYANAD உட்பட கேரள மாநில வடக்கு மாவட்டங்களிலும் #MANGALURU , #UDUPI உட்பட கர்நாடக மாநில தெற்கு கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்று மற்றும் இன்றைய சூழல்களே இன்றும் இரவும் நாளையும் தொடரும்.அதன்படி இன்றும் #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.சென்னை மாநகரிலும் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழை பதிவாகலாம்.பிற பகுதிகளில் அங்கும் இங்குமாக சில இடங்களில் இன்று காலையை போலாவே சாரல் அல்லது தூரல் நாளையும் பதிவாகலாம்.

22-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவான பகுதிகளின் நிலவரம்.

அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 84 மி.மீ
தேவாலா  (நீலகிரி மாவட்டம் ) - 66 மி.மீ
#சோழிங்கநல்லூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 46 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம் ) - 41 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 40 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம் ) - 40 மி,மீ
DGP அலுவலகம் (சென்னை மாநகர் ) - 39 மி.மீ
தாம்பரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 35 மி.மீ
#UPPER_BHAVANI  (நீலகிரி மாவட்டம் ) - 34 மி.மீ
சின்கோனா  (நீலகிரி மாவட்டம் ) - 30 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம் ) - 25 மி.மீ
நடுவட்டம்  (நீலகிரி மாவட்டம் ) - 24 மி.மீ
கேளம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 24 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம் ) - 23 மி.மீ
ஆர்.எஸ்.மங்களம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 20 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 18 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 17 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம் ) - 16 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம் ) - 15 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 15 மி.மீ
திருப்போரூர் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 14 மி.மீ
பொன்னேரி  (திருவள்ளூர் மாவட்டம் ) - 12 மி.மீ
திருவாடனை (ராமநாதபுரம் மாவட்டம் ) - 11 மி.மீ
மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 11 மி.மீ
திருக்கழுகுன்றம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 10 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர் ) - 10 மி.மீ
அயினாவரம் (சென்னை மாநகர் ) - 10 மி.மீ
எம்ரால்ட் (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
பெரம்பூர் (சென்னை மாநகர் ) - 10 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...