31-07-2019 நேரம் பிற்பகல் 2:30 மணி நான் கடந்த வாரம் பதிவேற்றம் செய்திருந்த அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் குறிப்பிட்டு இருந்தது போல நாளை முதல் பிறக்க இருக்கும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் குறிப்பாக 03-08-2019 (ஆகஸ்ட் 3) அல்லது 04-08-2019 (ஆகஸ்ட் 4) ஆம் தேதிகளின் வாக்கில் வங்கதேசத்தை ஒட்டியிருக்கும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளது.இதன் காரணமாக அன்று முதல் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் #மும்பை உட்பட மஹாராஷ்டிர மாநில கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகலாம்.மும்பை மாநகரில் மீண்டும் வெள்ளபெருக்கு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.கடந்த வாரம் அதாவது 24-07-2019 அன்று நமது பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை காண - https://www.facebook.com/puduvaiweatherman/posts/2577171138973525
தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில் தற்பொழுது நிலவி வரும் சுழல்களே அடுத்து வரக்கூடிய வாரத்திலும் தொடரும்.காற்றின் திசையில் ஏற்படும் சிறு மாறுதல்களை பொறுத்து அவ்வப்பொழுது ஓரிரு இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம்.இது தொடர்பாக அவ்வப்பொழுது நமது பக்கத்தில் தினமும் பதிவிட முயற்சிக்கிறேன்.பொதுவாக ஒரு பரவலான மழைக்கு அடுத்த சில நாட்களுக்கு வாய்ப்புகள் இல்லை.
03-08-2019 (ஆகஸ்ட் 3) அல்லது 04-08-2019 (ஆகஸ்ட் 4) ஆம் தேதிகளின் வாக்கில் உருவாக இருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து 05-08-2019 அல்லது 06-08-2019 ஆம் தேதிகளின் வாக்கில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டியிருக்கும் மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் இதன் காரணமாக 05-08-2019 ஆம் தேதி முதல் அடுத்த சில நாட்களுக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் ஆங்காங்கே கனமழை முதல மிக கனமழை பதிவாகக்கூடும்.அதன் பின்னர் அதற்கும் அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேற்கு -வட மேற்கு திசையில் நிலப்பகுதிகளிலேயே நகர்ந்து செல்லலாம்.அது நிலப்பகுதிக்குள் மேற்கு -வட மேற்கு திசையில் நகறுகையில் 05-08-2019 ஆம் தேதி வாக்கில் கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அது நிலப்பகுதிக்குள் நகர்கையில் 07-08-2019 ஆம் தேதி முதல் அதற்கு அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு கேரள மாநிலத்திலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.எதுவாயினும் இந்த மழை வாய்ப்புகள் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகளை பொறுத்து மாறுதல்களுக்கு உட்பட்டவை.நாட்கள் நெருங்குகையில் இது உறுதியாகும்.ஆகஸ்ட் மாத இரண்டாவது வாரத்தில் தமிழகத்தில் வெப்பசலன மழையின் அளவு மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
நான் மீண்டும் ஒருமுறை பதிவிடுகிறேன் தமிழக உள் மாவட்டங்களை பொறுத்தவரையில் இந்த மாதத்தின் பிற்பாதிகளில் பதிவாக இருக்கும் வெப்பசலன மழையை முழுமையாக பயன்படுத்தி மழை நீரை சேகரித்து வருங்கால நாட்களை எளிமையாக எதிர்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்வது நல்லது.
2019 ஆம் ஆண்டின் வட கிழக்கு பருவமழை கடலோர மாவட்டங்களில் இயல்பான அளவு அல்லது அதற்கும் சற்று அதிகமாக மழை பொழிவை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பாக அடுத்த மாத இறுதியில் விரிவாக பதிவிடுகிறேன்.
0 comments:
கருத்துரையிடுக