தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

05-08-2019 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை அளவுகள் |தென்மேற்கு பருவமழை நாளை முதல் தீவிரம்

05-08-2019 நேரம் காலை 10:15 மணி தற்பொழுது வடக்கு கேரளாவில் தென்மேற்கு பருவமழை சற்று வீரியம் அடைந்துள்ளது இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்ட மேற்கு பகுதியான #அவலாஞ்சி பகுதியில் கிட்டதட்ட 211 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

இன்று இதன் பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் கேரள மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் பல இடங்களிலும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம்.குறிப்பாக #வால்பாறை - #மூணாறு - #கோத்தமங்களம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் அதன் இடையே உள்ள பகுதிகளிலும் இன்று பருவமழை வீரியம் பெற வாய்ப்புகள் உள்ளது.#சோலையாறு மற்றும் #பெரம்பிக்குளம் அணை சுற்றுவட்டப் பகுதிகளிலும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் நல்ல மழை பதிவாகலாம்.மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் #ஈரோடு மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் ,கோவை மாநகர் மற்றும் #பொள்ளாச்சி உட்பட கோவை மாவட்ட பகுதிகள் , #திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆங்காங்கே சாரல் மற்றும் லேசான மழை அவ்வப்பொழுது பதிவாகலாம்.தேனி , நெல்லை , கன்னியாகுமரி மாவட்டத்திலும் திண்டுக்கல் , விருதுநகர் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் இன்று மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.

தென்கடலார , தென் உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே வானம்.மேகமூட்டத்துடன் காணப்படலாம் சில இடங்களில் அங்கும் இங்குமாக லேசான தூரல் அல்லது மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மாலை நேரங்களில் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கலாம்.இது தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் பதிவிடுகிறேன்.


05-08-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

அவலாஞ்சி  (நீலகிரி மாவட்டம் ) - 211 மி.மீ
UPPER_BHAVANI (நீலகிரி மாவட்டம் ) - 90 மி.மீ
கூடலூர்பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 74 மி.மீ
நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 70 மி.மீ
எமரால்ட் (நீலகிரி மாவட்டம் ) - 61 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம் ) - 44 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம் ) - 38 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம் ) - 30 மி.மீ
சோலையாறு (கோவை மாவட்டம் ) - 30 மி.மீ
தொட்டபெட்டா ,உதகை (நீலகிரி மாவட்டம் ) - 25 மி.மீ 
பெரம்பிகுளம் (கோவை மாவட்டம் ) - 22 மி.மீ
குந்தாபாலம் (நீலகிரி மாவட்டம் ) - 20 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம் ) - 21 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம் ) - 20 மி.மீ 
TNAU (கோவை மாவட்டம் ) - 15 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம் ) - 14 மி.மீ
சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ
கெட்டி (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ 
பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ
#சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர் ) - 9 மி.மீ


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...