ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுகள்
------------------------------------------
07-08-2019 நேரம் பிற்பகல் 2:15 மணி நான் கடந்த 31-07-2019 அன்று அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் குறிப்பிட்டு இருந்தது போல இரண்டு நாட்களுக்கு முன்பு வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது அதன் பின்னர் அது வலுப்பெற்று தற்பொழுது ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) என்கிற நிலையில் வடக்கு ஒடிசாவின் கடலோர பகுதிகளை கடந்து சற்று முன்பு ஒடிசாவின் #Balasore பகுதிக்கு நெருக்கத்தில் மேற்கே நிலப்பகுதியில் நிலைகொண்டிருந்தது.இதன் நகர்வுகள் தொடர்பாக நான் கடந்த வாரம் எழுதிய பதிவிலேயே விரிவாக பதிவிட்து இருந்தேன்.அந்த பதிவினை காண - https://www.facebook.com/puduvaiweatherman/posts/2589615274395778
காணொளிவடிவில் காண - https://www.youtube.com/watch?v=kKrRpdN4abs
தற்பொழுது நிலைகொண்டிருக்கும் அந்த ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்து வரக்கூடிய நாட்களில் வட - மேற்கு திசையில் நகர முற்பட்டு பின்னர் அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கு -வட மேற்கு திசையில் நகர தொடங்கலாம் இதன் காரணமாக சத்தீஸ்கர் ,மத்தியபிரதேசம் , குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அதன் நகர்வுகளை பொறுத்து அடுத்து வரக்கூடிய நாட்களில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான தகவல்களை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.
தமிழக மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கேரளம்
------------------------------------------------------------------------------
அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரள மாநிலத்தில் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.மேலும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.குறிப்பாக தேவாலா , அவலாஞ்சி , மூக்குறுத்தி , கூடலூர் ,நடுவட்டம் உட்பட நீலகிரி மாவட்டத்தின் அநேக மேற்கு பகுதிகள் மற்றும் சின்னக்கல்லாறு , சின்கோனா ,சோலையாறு உட்பட வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகளில் மிக கனமழை பதிவாகும்.கேரள மாநிலத்தை பொறுத்தவரையில் மூணாறு உட்பட இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களின் அநேக இடங்களிலும் மிக கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.கேரள மாநிலத்தின் பிற வடக்கு பகுதிகளிலும் கனமழை பதிவாகும். 10-08-2019 அல்லது 11-08-2019 ஆம் தேதி வரையில் இதே சூழல்களே தொடரும்.
இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தேனி மாவட்டம் பெரியார் அணை சுற்றுவட்டப் பகுதிகளிலும் நெல்லை மற்றும் குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.
தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் வெப்பசலன மழை
--------------------------------------------------------
தென்மேற்கு பருவமழை வீரியம் அடைந்து இருப்பதால் தமிழகத்தில் பொதுவாக பிற்பகலுக்கு பிறகு வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படலாம் அங்கும் இங்குமாக சில இடங்களில் சாரல் , தூறல் அல்லது லேசான மழை பதிவாகலாம்.11-08-2019 அல்லது 12-08-2019 ஆம் தேதிகளில் வாக்கில் தமிழக உள் மாவட்டங்களிலும் சென்னை , புதுச்சேரி உட்பட வட கடலோர மாவட்டங்களிலும் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம்.14-08-2019 அலல்து 15-08-2019 ஆம் தேதிகளின் வாக்கில் வட கடலோர மாவட்டங்களில் வெப்பசலன மழையின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் ஆகஸ்ட் மாத இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதம் மிக சிறப்பானதாக அமைய வாய்ப்புகள் உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக