தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

19-09-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ?



19-09-2019 நேரம் பிற்பகல் 1:50 மணி

வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் சூழல்கள்
============================================
தற்பொழுது நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை அங்கும் இங்குமாக பதிவாக வாய்ப்புகள் உள்ளது.ஒவ்வொரு நாளும் பிற்பகல் வேளையில் அடுத்த 24 மணி நேர மழை வாய்ப்புகளை நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.21-09-2019 அல்லது 22-09-2019 ஆம் தேதிகளின் வாக்கில் வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புகள் உள்ளது அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுத்து மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 23-09-2019 அல்லது 24-09-2019 ஆம் தேதிகளின் வாக்கில் தெற்கு ஆந்திர பகுதிகளை நெருங்க முற்படலாம் இதன் காரணமாக 23-09-2019 ஆம் தேதி முதல் அல்லது அதற்கு அடுத்து வரக்கூடிய சில  நாட்களில் சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள்  உட்பட தமிழக வட கடலோர  மாவட்டங்களில் ஆங்காங்கே வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திராவில் கரையை கடந்து நிலப்பகுதிகளில் பயணித்து 26-09-2019 அல்லது 27-09-2019 ஆம் தேதிகளின் வாக்கில் மும்பை மாநகரை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கலாம்.அது அதன் பின்னர் மேற்கு திசையில் அரபிக்கடல் பகுதியில் நகர்ந்து செல்லலாம். அதேசமயம் வடக்கு வங்கக்கடல் பகுதியில் அழுத்தம் அதிகரித்து தமிழகத்தில் இந்த மாத இறுதியில் கிழக்கு திசை காற்றின் வீரியம் சற்று அதிகரிக்க தொடங்கலாம்.கடந்த ஆண்டினை போலவே அக்டோபர் முதல் வாரத்திலேயே கிழக்கு திசை காற்றின் வீரியம் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது.நான் முன்பு பதிவிட்டு இருந்ததை போல அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிப்புகள் வெளியாகலாம்.


அரபிக்கடல் பகுதியில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
========================================
அடுத்த 24 மணி நேரத்தில் வட கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் குஜராத்  - மகாராஷ்டிர மாநிலம் அருகே உள்ள அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் உள்ளது .அது  அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 48 மணி நேரத்தில் உருவெடுக்கலாம்.அது மேலும் தீவிரமடைந்து அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் ஒரு புயலாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அது மேற்கு திசையில் நகர்ந்து ஓமன் நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து .அங்கு நிலவி வரும் சாதகமற்ற சூழல்கள் காரணமாக 25-09-2019 அல்லது 26-09-2019 ஆம் தேதிகளின் வாக்கில் வலுவிழக்கலாம்.இதனால் தமிழகத்துக்கு எந்த வித பாதிப்புகளும் கிடையாது நேரடியான மழை வாய்ப்புகளும் எதுவும் இல்லை.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...