தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

26-09-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ?



26-09-2019 பிற்பகல் 1:55 மணி அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகத்தில் பதிவாகி வரும் வெப்பசலன மழையின் அளவு குறைய தொடங்கலாம்.குறிப்பாக தமிழக வட கடலோர மற்றும் வட உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பதிவாகி வந்த வெப்பசலன மழை குறைய தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.அதே சமயம் அவ்வப்பொழுது தென் உள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.தற்பொழுது பதிவாகி வருவதை போலவே ஒவ்வொரு நாளும் பிற்பகல் நேரத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பதிவாக வாய்ப்புகள் இருக்கும் பகுதிகள் தொடர்பான தகவல்களை பதிவிடுகிறேன்.அடுத்து வரக்கூடிய நாட்களில் வட தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலையானது கடந்த வாரம் பகல் நேரத்தில் நிலவி வந்த வெப்பநிலையை விட அதிகரித்து இருக்க வாய்ப்புகள் உள்ளது.அக்டோபர் முதல் வார இறுதியில் இந்த சூழல்கள் மாற தொடங்கலாம்.அக்டோபர் இரண்டாவது வாரம் முதல் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதற்கான சாதகமான சூழல்கள் உருவாக தொடங்கலாம்.

வட கிழக்கு பருவமழை
====================
நான் தொடர்ந்து தெரிவித்து வருவது போல வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் நிகழும் 2019 ஆம் ஆண்டு பதிவாக இருக்கும் ஒட்டு மொத்த மழை அளவானது இயல்பு அல்லது அதற்கும் அதிகமான அளவில் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.அதே போல அக்டோபர் மூன்று அல்லது நான்றாவது வாரத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிப்பு வெளியாகலாம்.நவம்பர் மாதம் வட கடலோர மாவட்டங்களுக்கு சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்பலாம்.






பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...