தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

01.12.2019 அடுத்த 24 மணி நேரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ? கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

01-12-2019 நேரம் பிற்பகல் 1:00 மணி நான் கடந்த குரல் பதிவில் நமது youtube பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தது போல -  https://youtu.be/MMqzjiBM06s இன்று காலை #புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய விழுப்புரம்  மாவட்ட பகுதிகளில் வலுவான மழை பொழிவை ஏற்படுத்திய மழை மேகங்கள் வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றன தற்சமயம் நான் முன்பு குறிப்பிட்டு இருந்தது போல #மதுராந்தகம் ,#மேல்மருவத்தூர் ,#செய்யாறு மற்றும் #மரக்காணம் சுற்றிவட்டப் பகுதிகளில் பரவலாக பதிவாகி வருகின்றன அவை மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து #செங்கல்பட்டு சுற்றுவட்டப் பகுதிகளில் பரவலாக மழையை பதிவு செய்யலாம் அதேபோல சென்னை மாநகர் மற்றும் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் மழையை பதிவு செய்யலாம் மேலும் #கடலூர் ,#புதுச்சேரி மாவட்டங்கள் உட்பட வட கடலோர மாவட்டங்களை ஒட்டியிருக்கும் கடல் பகுதிகளில் தொடர்ந்து மழை மேகங்கள் குவிந்து வருகின்றன அடுத்த சில மணி நேரங்களில் #புதுச்சேரி ,#கடலூர் , #விழுப்புரம் ,#காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,சென்னை ,திருவள்ளூர் உட்பட வட கடலோர மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.தற்சமயம் புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளை நெருங்கி வரும் மழை மேகங்கலும் வடக்கு நோக்கிய நகரும்.

அதேபோல தற்சமயம் #திட்டக்குடி ,#ஸ்ரீமுஷ்ணம் ,#விருதாச்சலம் ,#லால்பேட்டை ,#செந்தறை ,#குழுமூர் ,#பெண்ணாடம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

அடுத்த 24 மணி நேர வானிலை
===========================
அடுத்த 24 மணி நேரத்திலும் வட கடலோர மாவட்டங்கள் உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கணமழையும் பதிவாகலாம்.இவைத்தவிர்த்து உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று மழை பதிவாகலாம்.இன்று அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் குறிப்பாக நீலகிரி ,வால்பாறை ,கொடைக்கானல் ,மேகமலை உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் சில இடங்களில் சற்று வலுவான மழை பதிவாகலாம்.

இன்று காலை மாவட்டங்கள் வாரியாக 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரம் தொடர்பாக பதிவு செய்து இருந்தேன்.

01-12-2019 ஆகிய இன்று காலை 8:30 மணி வரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் 70 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரம்.
========================

புதுவை மாநிலம்
=============
புதுச்சேரி - 114 மி.மீ
காரைக்கால் - 77 மி.மீ

தமிழகம்
=========
சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) -  186 மி.மீ

கொத்தவாச்சேரி (கடலூர் மாவட்டம்) - 175 மி.மீ

குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 174 மி.மீ

வடக்குத்து(கடலூர் மாவட்டம்) - 173 மி.மீ

கடலூர் (கடலூர் மாவட்டம்)- 166 மி.மீ

தூத்துக்குடி  (தூத்துக்குடி மாவட்டம்) - 164 மி.மீ

மணிமுத்தாறு (நெல்லை மாவட்டம்) 151 மி.மீ

குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்) -  144 மி.மீ

வேதாரண்யம் (நாகை மாவட்டம்) -  138 மி.மீ

செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 133 மி.மீ

புவனகிரி (கடலூர் மாவட்டம்) - 132 மி.மீ

உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  132 மி.மீ

வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 129 மி.மீ

மதுராதங்கம்(செங்கல்பட்டு மாவட்டம்) - 129 மி.மீ

சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 129 மி.மீ

தரங்கம்பாடி (நாகை மாவட்டம்) - 128 மி.மீ

குப்பநத்தம் (கடலூர் மாவட்டம்) - 127 மி.மீ

பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 124 மி.மீ

மேமாத்தூர்(கடலூர் மாவட்டம்) - 123 மி.மீ

தங்கச்சிமடம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 118 மி.மீ

மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 117 மி.மீ

அண்ணாமலை நகர் ,சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) - 116 மி.மீ

பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) - 116 மி.மீ

புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) -  113 மி.மீ

ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  112 மி.மீ

விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்) - 112 மி.மீ

சோழிங்கநல்லூர் (சென்னை மாவட்டம்) -  112 மி.மீ

மகாபலிபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்) -  107 மி.மீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை மாநகர்) - 107 மி.மீ

மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) - 105 மி.மீ

தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 105 மி.மீ

பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 104 மி.மீ

DGP அலுவலகம் ,மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 103 மி.மீ

அணைக்கரை (தஞ்சை மாவட்டம்) - 101 மி.மீ

திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்) -  101 மி.மீ

திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்) -  100 மி.மீ

சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம்) - 99 மி.மீ

ஸ்ரீபெரம்பத்தூர்( செங்கல்பட்டு மாவட்டம்) - 99 மி.மீ

குடிதாங்கி(கடலூர் மாவட்டம்) - 98 மி.மீ

பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) - 99 மி.மீ

மண்டபம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  96 மி.மீ

வெட்டிகாடு (தஞ்சை மாவட்டம்) - 96 மி.மீ

அம்பாசமுத்திரம் (தென்காசி மாவட்டம்) -  95 மி.மீ

திருப்பூண்டி (நாகை மாவட்டம்) - 95 மி.மீ

ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 94 மி.மீ

முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்) -  94 மி.மீ

மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்) - 93 மி.மீ

மனல்மேடு (நாகை மாவட்டம்) - 93 மி.மீ

அசோக் பில்லர்  (சென்னை மாநகர்) - 92 மி.மீ

வீரகவூர்(கள்ளகுறிச்சி மாவட்டம்) - 92 மி.மீ

நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) -  91 மி.மீ

வானூர்(விழுப்புரம் மாவட்டம்) - 91மி.மீ

நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 90 மி.மீ

செம்பரம்பாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) -  90 மி.மீ

ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 88 மி.மீ

சூளாங்குறிச்சி (விழுப்புரம் மாவட்டம்) - 85 மி.மீ

திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 85 மி.மீ

பள்ளிப்பட்டு(திருவள்ளூர் மாவட்டம்) - 85 மி.மீ

தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 85 மி.மீ

மடுக்கூர் (தஞ்சை மாவட்டம்) - 85 மி.மீ

பட்டுக்கோட்டை (தஞ்சை மாவட்டம்) - 85 மி.மீ

தியாகதுர்கம்(கள்ளகுறிச்சி மாவட்டம்) - 84 மி.மீ

கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்) - 84 மி.மீ

காயல்பட்டினம்(தூத்துக்குடி மாவட்டம்) - 83 மி.மீ

அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 83 மி.மீ

கட்டுமயிலூர்(கடலூர் மாவட்டம்) - 82 மி.மீ

திருவலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்) -  82 மி.மீ

செங்கல்பட்டு (செங்கல்பட்டு மாவட்டம்) -  81 மி.மீ

லால்பேட்டை (கடலூர் மாவட்டம்) - 81 மி.மீ

கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) -  81 மி.மீ

கேளம்பாக்கம் (காஞ்சிபுரம் மாவட்டம்) -  80 மி.மீ

வேப்பூர் (கடலூர் மாவட்டம்) - 80 மி.மீ

பாளையங்கோட்டை (நெல்லை மாவட்டம்) -  80 மி.மீ

பொல்லான்துறை(கடலூர் மாவட்டம்) - 80 மி.மீ

வழிநோக்கம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 80 மி.மீ

ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்) - 80 மி.மீ

பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 78 மி.மீ

நகுடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 78 மி.மீ

சோளிங்கர் (வேலூர் மாவட்டம்) - 78 மி.மீ

மனல்மேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) -  78 மி.மீ

உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 77 மி.மீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 77 மி.மீ

தாமரைபாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்) - 77 மி.மீ

ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 77 மி.மீ

வலவனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 77 மி.மீ

சோழவரம் (திருவள்ளூர் மாவட்டம்) - 76 மி.மீ

மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 75 மி.மீ

திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்) - 75 மி.மீ

நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 73 மி.மீ

ஏரையூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 73 மி.மீ

ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 72 மி.மீ

வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 72 மி.மீ

பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) -  72 மி.மீ

சீர்காழி (நாகை மாவட்டம்) -  72 மி.மீ

கோழியனூர்(விழுப்புரம் மாவட்டம்) - 70 மி.மீ

நெய்வாசல்தென்பாதி (தஞ்சை மாவட்டம்) -  70 மி.மீ

மீனம்பாக்கம் -  சென்னை விமானநிலையம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 70 மி.மீ

அகரம்சிகூர் (பெரம்பலூர் மாவட்டம்) - 70 மி.மீ

ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்) - 70 மி.மீ

மயிலாடுதுறை (நாகை மாவட்டம்) - 70 மி.மீ

காளையநல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) -  70 மி.மீ

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...