தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

05 டிசம்பர் 2019 அரபிக்கடல் பகுதியில் உருவானது பவன் (pawan) புயல் | இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

05-12-2019 நேரம் காலை 10:10 மணி நான் நேற்றைய எனது நள்ளிரவை ஒட்டிய அதிகாலை நேர குரல் பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல தற்சமயம் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நேற்று நிலைக் கொண்டிருந்த அந்த அழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவிழக்க தொடங்கியிருப்பதை அறிய முடிகிறது.இன்று காலை அது வலு குறைய தொடங்கி தற்சமயம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையில் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.அடுத்த சில மணி நேரங்களில் அது மேலும் வலு குறைய வாய்ப்புகள் உள்ளது.

அரபிக்கடல் பகுதியில் உருவானது #பவன் (#pawan) புயல்
======================
நேற்று தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் #சோமாலியா நாட்டிற்கு கிழக்கே நிலை கொண்டு இருந்த அந்த அழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தீவிரமடைந்து ஒரு புயலாக உருவெடுத்துள்ளது.நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அதற்கு இலங்கையின் தேர்வு சொல்லான #பவன் (#PAWAN) என்கிற பெயர் வழங்கப்படும்.#பவன்_புயல் (#pawan_cyclone) ஆனது அடுத்து வரக்கூடிய நாட்களில் வட மேற்கு திசையில் நகர்ந்து 06-12-2019 ஆம் தேதி வாக்கில் வலுவிழந்து #சோமாலியா (#somalia) நாட்டின் கடலோர பகுதிகளை அடைய முற்படம்.இதன் காரணமாக கோமாலிய நாட்டின் கடலோர பகுதிகளில் கனமழை பதிவாகலாம்.

இவ்விரண்டு நிகழ்வுகளால் தமிழகத்துக்கு எந்த வித பாதிப்புகளும் கிடையாது.

இன்றைய வானிலை
=================
தற்பொழுது இந்திய பெருங்கடலை ஒட்டிய மாலத்தீவுகள் கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த அகடு (trough of low) நிலவி வருகிறது இதன் காரணமாக இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி ,ராமநாதபுரம் ,நெல்லை ,கன்னியாகுமரி உட்பட தென் கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.ஒரு சில இடங்களில் வலுவான மழையும் பதிவாகலாம்.தமிழகத்தின் பிற பகுதிகளை பொறுத்தவரையில் அங்கும் இங்குமாக ஓரிரு இடங்களில் சில நிமிட மழை பதிவாகலாம் நேற்றை போலவே.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 மி.மீ க்கும் அதிகமான அளவு  மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரம்
===================
விரகனூர்(சேலம் மாவட்டம்) - 22 மி.மீ

கடவூர் (கரூர் மாவட்டம்) - 21 மி.மீ

கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) -  17 மி.மீ

சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) -  16 மி.மீ

தன்ராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) -  14 மி.மீ

பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 12 மி.மீ

ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  12 மி.மீ

கோவிலங்குளம் (விருதுநகர் மாவட்டம்) -  11 மி.மீ

கங்கவள்ளி (சேலம் மாவட்டம்) - 9 மி.மீ

ஒட்டஞ்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) -  8 மி.மீ

கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) -  8 மி.மீ

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...