தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

11 டிசம்பர் 2019 மேற்கத்திய கலக்கத்தின் (western disturbance) தாக்கத்தால் வட இந்தியாவில் கணமழைக்கு வாய்ப்பு | காஷ்மீர் செல்வதை சுற்றுலா பயணிகள் தவிர்ப்பது நல்லது

11-12-2019 நேரம் காலை 10:40 மணி தற்சமயம் மேற்க்கத்திய கலக்கம் (western disturbance) ஈரான் நாட்டை ஒட்டியிருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதிகளில் நிலவி வருகிறது இதன் தாக்கத்தால் தற்சமயமே லடாக் மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் மலை பகுதிகளில் கடுமையான பணிபொழிவும் சமவெளி பகுதிகளில் அங்கும் இங்குமாக மழையும் பதிவாகி வருகிறது.நாம் எதிர்பார்த்தது போல இந்த மேற்க்கத்திய கலக்கத்தின்(western disturbance) தாக்கத்தால் மேற்கு ராஜஸ்தான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு பாகிஸ்தான் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக (cyclonic circulation) வாய்ப்புகள் உள்ளது.இதன் காரணமாக 12-12-2019 ஆம் தேதி ஆகிய நாளை முதல் பஞ்சாப் ,ஹரியானா ,சண்டிகர் ,புதுடில்லி ,காஷ்மீர் ,ஜம்மு, லடாக்  ,ராஜஸ்தான் மாநிலத்தின் வடக்கு பகுதிகள் உட்பட வட மாநிலங்களில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம் மேலும் 13-12-2019 ஆகிய நாளை மறுநாள் #டில்லி ,#சண்டிகர் ,#குழுமனாளி ,#சிம்லா ,#டார்ஜீலிங் போன்ற பகுதிகள் உட்பட சண்டிகர் ,#உத்திரகாண்ட் ,#லடாக் இமையமலையை ஒட்டியிருக்கும் உதிர்ப்பிரதேச மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கான எச்சரிக்கை
==========================
சுற்றுலா பயணிகள் அடுத்து வரக்கூடிய நாட்களில் காஷ்மீர் ,உத்திரகாண்ட் ,லடாக் போன்ற இமயமலை அடிவாரத்தை சார்ந்த மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.தற்சமயம் அங்கு இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதும் அவசியம்.உங்களது உறவினர்கள் அல்லது நண்பர்கள் தற்சமயம் அப்பகுதிகளுக்கு சுற்றுலா சென்றிருந்தாலோ வசித்து வந்தாலோ அவர்களுக்கு இந்த தகவலை தெரியப் படுத்துங்கள்.14-12-2019 ஆம் தேதி இந்த சூழல்கள் மாறும்.அந்த மாநிலங்களில் மேலும் வெப்பநிலை குறைய தொடங்கலாம்.நீண்ட நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்பட்ட இமையலையின் உயரிய பகுதிகளை இணைக்கும் வழித்தடமான #Zojila  சுரங்கம் மீண்டும் தற்காலிகமாக மூடப்படலாம்.

தமிழக வானிலை
===============
கடந்த 24 மணி நேரத்தில் 5 மி.மீ க்கும் அதிகமாக ராமேஸ்வரம் பகுதியில் மட்டும் 7 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.நான் முன்பு குறிப்பிட்டு இருந்தது போல 14-12-2019 ஆம் தேதி நாகை ,காரைக்கால் மாவட்டங்கள் உட்பட டெல்டா ,தென் உள் ,உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.இது தொடர்பான விரிவான தகவல்களை மீண்டும் நாளை பதிவிடுகிறேன்.மேலும் 13-12-2019 ஆம் தேதியிலேயே நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்கள் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் உட்பட தென் கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் குறைந்த பட்சமாக உதகையில் 7.1°C அளவு வெப்பநிலையும் சமவெளி பகுதிகளில் மிகவும் குறைந்தபட்சமாக #தர்மபுரி நகரில்.19°C அளவு வெப்பமும் பதிவாகியுள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...