தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

12-12-2019 இரவு 9:00 மணி அடுத்த சில மணி மழை வாய்ப்புகள்

12-12-2019 நேரம் இரவு 9:00 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் ராடார் படம் இன்று இரவு 8:40 மணி வாக்கில் பதிவானது அதன்படி #நாகை , #காரைக்கால் , #கடலூர் ,#புதுச்சேரி மற்றும் #புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளுக்கு கிழக்கே இருக்கக்கூடிய கடல் பகுதிகளில் அங்கும் இங்குமாக சிறு சிறு  மழை மேகங்கள் குவிந்து இருப்பதை காணலாம்.அடுத்த சில மணி நேரங்களில் நான் மேற்குறிப்பிட்டு இருக்கும் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் இரவு ,நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை நேரங்களில் மழை பதிவாகலாம்.நாளை காலை மழையின் அளவு ஆங்காங்கே அதிகரிக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது.13-12-2019 ஆகிய நாளை நாம் முன்பு எதிர்பார்த்து போல நான் மேற்குறிப்பிட்டு இருக்கும் மாவட்டங்கள் உட்பட வட கடலோர மாவட்டங்களிலும் ,டெல்டா ,தென் கடலோர மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

14-12-2019 ஆகிய நாளை மறுநாள் அல்லது நாளை நள்ளிரவு நேரத்தில் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.சூழல்களை பொறுத்து 14-12-2019 ஆம் தேதி அன்று #சென்னை மாநகரிலும் ஒரு சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...