தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2019 டிசம்பர் 04 இன்றைய வானிலை | கடந்த 24 மணி நேர மழை நிலவரம் | அரபிக்கடல் பகுதியில் இரண்டு அழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் | puducherry weatherman

04-12-2019 நேரம் காலை 10:00 மணி தற்சமயம் கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சதீவுகள் கடல் பகுதிகளில் நேற்று காலை நிலைகொண்டு இருந்த அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது (well marked low pressure area) மேலும் தீவிரமடைந்து நேற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) வலுவடைந்தது தற்சமயம் அது மேலும் தீவிரமடைந்து ஒரு அழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) என்கிற நிலையில் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டு இருப்பதை அறிய முடிகிறது.

அதேபோல தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று சோமாலியா வுக்கு கிழக்கே நிலைகொண்டிருந்த அந்த அழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அதே இடத்தில் கடந்த சில மணி நேரங்களாக மாற்றங்கள் எதுவும் இன்றி தொடர்கிறது.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் குறிப்பாக நாளை அதிகாலை நேரங்களில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் உட்பட தென் கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாகலாம் இவைத்தவிர்த்து தமிழகத்தில் அங்கும் இங்குமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.

வட கடலோர மாவட்டங்களில் மீண்டும் எப்பொழுது மழையை எதிர்பார்க்கலாம்
================
நான் கடந்த வாரம் எழுதியிருந்த அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் குறிப்பிட்டு இருந்தது போல 06-12-2019 ஆம் தேதி அன்று #நாகப்பட்டினம் மற்றும் #காரைக்கால் மாவட்டங்கள் உட்பட டெல்டா மாவட்டங்களில் மழை பதிவாகலாம் 07-12-2019 ஆம் தேதி வாக்கில் #புதுச்சேரி ,#சென்னை ,#கடலூர் ,#செங்கல்பட்டு ,#விழுப்புரம் உட்பட பிற வட கடலோர மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக மழை பதிவாகலாம்.

கடந்த 24 மணி நேரத்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரம்
=======================

புதுவை மாநிலம்
==============
காரைக்கால் (காரைக்கால் மாவட்டம்) - 11 மி.மீ

தமிழகம்
=======

பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 48 மி.மீ

திருமானூர் (அரியலூர் மாவட்டம்) - 35 மி.மீ

பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) - 31 மி.மீ

செந்துறை (அரியலூர் மாவட்டம்) - 31 மி.மீ

கல்லக்குடி (திருச்சி மாவட்டம்) - 26 மி.மீ

நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) - 25 மி.மீ

குடவாசல் (திருவாரூர் மாவட்டம்) - 24 மி.மீ

ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 21 மி.மீ

தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 20 மி.மீ

ஆயிங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 20 மி.மீ

கொரடாச்சேரி (திருவாரூர் மாவட்டம்) - 19 மி.மீ

செய்யூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) - 19 மி.மீ

சேரன்மாதேவி (நெல்லை மாவட்டம்) - 19 மி.மீ

பழவிடுதி (கரூர் மாவட்டம்) - 17 மி.மீ

அம்பாசமுத்திரம் (தென்காசி மாவட்டம்) -  14 மி.மீ

நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்) - 14 மி.மீ

காரையூர்(புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ

புள்ளம்பாடி (திருச்சி மாவட்டம்) - 14 மி.மீ

கடவூர் (கரூர் மாவட்டம்) - 13 மி.மீ

தென்பறநாடு (திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ

மணிமுத்தாறு அணை (நெல்லை மாவட்டம்) - 13 மி.மீ

நந்தியார் ,லால்குடி (திருச்சி மாவட்டம்) - 13 மி.மீ

பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம்) -  13 மி.மீ

காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 12 மி.மீ

குன்னூர் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ

சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ

நத்தம் AWS (திண்டுக்கல் மாவட்டம்) - 11 மி.மீ

வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்) -  11 மி.மீ

தேக்கடி (தேனி மாவட்டம்) - 10 மி.மீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) -  10 மி.மீ

வழிநோக்கம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 10 மி.மீ

சோத்துப்பாறை அணை (தேனி மாவட்டம்) - 10 மி.மீ

கோடநாடு (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ

கிண்ணக்கோரை (நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...