தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2019 டிசம்பர் 06 கடந்த 24 மணி நேர மழை நிலவரம் | இன்றைய வானிலை | அடுத்த 24 மணி நேர வானிலை | ராமேஸ்வரம் 84 மி.மீ

06-12 2019 நேரம் காலை 10:00 மணி நாம் எதிர்பார்த்தது போலவே கடந்த 24 மணி நேரத்தில் #ராமேஸ்வரம் சுற்றுவட்டப் பகுதிகளில் சிறப்பான மழை பதிவாகியுள்ளது மேலும் அந்த மழை மேகங்கள் மேற்கு நோக்கி நகர்ந்து சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட பகுதிகளிலும் அங்கும் இங்குமாக மழை பதிவாகியுள்ளது.

குறைந்த காற்றழுத்த அகடு (trough of low)
=========================
நேற்று மாலதீவுகளுக்கு கிழக்கே இந்தியபெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த அந்த குறைந்த காற்றழுத்த அகடு நாம் எதிர்பார்த்த படி மேற்கு நோக்கி நகர்ந்து தற்சமயம் மாலதீவுகளுக்கு மேற்கே தென் கிழக்கு அடபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது அடுத்த சில மணி நேரங்களில் அது வட மேற்கு திசையில் அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து செல்ல முற்படலாம்.நேற்று இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் காற்று சாதகமாக குவிந்தது.

அடுத்த சில மணி நேரங்களில் அந்த அகடு வட மேற்கு திசையில் நகர முற்படும் என்பதால் இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் ,தூத்துக்குடி  மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.மேலும் நாம் எதிர்பார்த்தது போல #பாக்ஜலசந்தி பகுதிகளில் தொடர்ந்து மழை மேகங்கள் குவிந்து வருவதை நீங்களே ராடார் படங்களின் வாயிலாக காணலாம் அடுத்த 24 மணி நேரத்தில் #நாகை மற்றும் #காரைக்கால் மாவட்டங்கள் உட்பட வட கடலோர மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.குறிப்பாக நள்ளிரவு அல்லது 07-12-2019 ஆகிய நாளை அதிகாலை மற்றும் காலை நேரங்களில் #புதுச்சேரி , #சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் மற்றும் கடலூர் மாவட்டம் வட கடலோர மாவட்டங்கள் உட்பட அங்கும் இங்குமாக மழை பதிவாகலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை இன்று பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரம்
=======================

ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  84 மி.மீ

தங்கச்சிமடம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  39 மி.மீ

திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 28 மி.மீ

பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) - 21 மி.மீ

மண்டபம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 21 மி.மீ

காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்) - 17 மி.மீ

விரகனூர் (மதுரை மாவட்டம்) -  15 மி.மீ

சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்) -  14 மி.மீ

சிட்டாம்பட்டி (மதுரை மாவட்டம்) - 13 மி.மீ

சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) -  13 மி.மீ

குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்) -  12 மி.மீ

கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) -  10 மி.மீ

கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) -  9 மி.மீ

தொண்டி (ராமநாதபுரம் மாவட்டம்) - 9 மி.மீ

மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ

திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்)- 8 மி.மீ

வட்டானம் (ராமநாதபுரம் மாவட்டம்) - 8 மி.மீ

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...