தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2019 டிசம்பர் 07 அடுத்த 24 மணி நேர வானிலை | கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

07-12-2019 நேரம் காலை 8:50 மணி நாம் எதிர்பார்த்தது போல வட கடலோர மாவட்டங்கள் உட்பட கடலோர மாவட்டங்களில்  அங்கும் இங்குமாக மழை மேகங்கள் பதிவாகி வருவதை அறிய முடிகிறது.குறிப்பாக தற்சமயம் #காரைக்கால் சுற்றுவட்டப் பகுதிகள் #கல்பாக்கம் - #மகாபலிபுரம் இடையே உள்ள கிழக்கு கடறகரை சாலை பகுதிகள் மற்றும் #சென்னை மாநகரின் வடக்கு பகுதிகளான #திருவெற்றியூர் ,#வல்லூர் மற்றும் எடையஞ்சாவடி சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.மேலும் #மீஞ்சூர் மற்றும் #புலிகேட் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

தற்சமயம் #ராமேஸ்வரம் பகுதிகளை ஒட்டிய கடல் பகுதிகள் உட்பட #ராமநாதபுரம் ,#புதுக்கோட்டை ,நாகை ,சென்னை ,திருவள்ளுர் ,செங்கல்பட்டு மாவட்டங்களின் கடலோர பகுதிகளை ஒட்டிய கடல் பகுதிகளில் சிறு சிறு மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.அடுத்த சில மணி நேரங்களில் #ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் மழை பதிவாக தொடங்கலாம் அதே போல #புதுக்கோட்டை ,#காரைக்கால் ,நாகை ,செங்கல்பட்டு ,சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்ட கடலோர பகுதிகளில் அங்கும் இங்குமாக மழை பதிவாகலாம்.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் பொதுவாக வட கடலோர மாவட்டங்கள் உட்பட கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.இன்று தென் உள் மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.கடலோர மாவட்டங்கள் தவிர்த்து இன்று #சிவகங்கை ,#மதுரை ,#விருதுநகர் ,#திண்டுக்கல் ,#புதுக்கோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் #திருவண்ணாமலை ,#காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம்.

கிடைக்கும் மழையை அனுபவியுங்கள் நண்பர்களே.

கடந்த 24 மணி நேரட்த்தில் 10 மி.மீ க்கும் அதிகமான அளவு பதிவாகியிருக்கும் மழை நிலவரம்
=======================

புதுவை மாநிலம்
=============
காரைக்கால் (காரைக்கால் மாவட்டம்) - 19 மி.மீ

தமிழகம்
========
தலைஞாயிறு (நாகை மாவட்டம்) - 59 மி.மீ

திருப்பூண்டி (நாகை மாவட்டம்) - 53 மி.மீ

திருத்துறைப்பூண்டி (திருவள்ளுர் மாவட்டம்) - 47 மி.மீ

மகாபலிபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) - 26 மி.மீ

மதுக்கூர் (தஞ்சாவூர் மாவட்டம்) - 21 மி.மீ

புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்) -  16 மி.மீ

ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 16 மி.மீ

திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) -  15 மி.மீ

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம்) - 15 மி.மீ

மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) -  14 மி.மீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்) - 14 மி.மீ

திருபுவனம்(சிவகங்கை மாவட்டம்) - 11 மி.மீ

வெட்டிக்காடு (தஞ்சாவூர் மாவட்டம்) - 11 மி.மீ

ஆரிமலம் (புதுக்கோட்டை மாவட்டம்) -  10 மி.மீ

மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) -  10 மி.மீ

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...