தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2019 டிசம்பர் 12 13-12-2019 ஆகிய நாளை மற்றும் 14-12-2019 ஆகிய நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவாக இருக்க கூடிய மழை | மேற்கத்திய கலக்கத்தின் தற்போதைய நிலவரம்

12-12-2019 நேரம் காலை 10:30 மணி நான் கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பிலிருந்தே தொடர்ந்து குறிப்பிட்டு வருவது போல அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களில் அதாவது 13-12-2019 ஆகிய நாளை மற்றும் 14-12-2019 ஆகிய நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள் உட்பட உள் மாவட்டங்களிலும் அங்கும் இங்குமாக மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.இது தொடர்பான விரிவான தகவல்களை மீண்டும் பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் பதிவிடுகிறேன்.

தற்சமயம் நாகை மாவட்டத்தின் தெற்கு பகுதிகளுக்கு கிழக்கே வங்கக்கடல் பகுதியில் மழை மேகங்கள் குவிய தொடங்கி இருப்பதை நீங்கள் காணலாம்.அவை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஒரு சில கடலோர பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் மழையை அங்கும் இங்குமாக பதிவு செய்ய முற்படலாம்.அதே சமயம் இன்று நள்ளிரவு நாளை அதிகாலை நேரங்களில் கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக லேசான மழை பதிவாகலாம்.13-12-2019 ஆகிய நாளை   கடலோர மாவட்டங்கள் உட்பட உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை மீண்டும் பதிவாக தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரத்தை பொறுத்தவரையில் நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதிகளில் 7 மி.மீ அளவு மழையும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் 5 மி.மீ அளவு மழையும் மணிமுத்தாறு அணை பகுதிகளில் 4 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.

மேற்க்கத்திய கலக்கம் (western disturbance)
=====================
நாம் எதிர்பார்த்ததை போல காஷ்மீர் பகுதிகளை நெருங்க இருக்கும் மேற்கத்திய கலக்கத்தின் தாக்கத்தால் உருவான மேலடுக்கு சுழற்சி (induced cyclonic circulation) தற்சமயம் மேற்கு ராஜஸ்தான் மாநில பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழையை பதிவு செய்ய தொடங்கிவிட்டத்தை நமக்கு கிடைக்க பெற்று இருக்கும் தகவல்களின் வாயிலாக அறிய முடிகிறது.அடுத்த சில மணி நேரங்களில் ஜம்மு ,காஷ்மீர் ,லடாக் மாநிலங்கள் உட்பட பஞ்சாப் ,ஹரியானா , புதுடில்லி ,சண்டிகர் ,உத்திரகாண்ட் மற்றும் உத்திர்ப்பிரதேச  மாநிலங்களில் ஆங்காங்கே வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய வலுவான மழையும் பதிவாகலாம்.இது தொடர்பான விரிவான தகவல்கள் முற்றும் சுற்றுலா பயணிகளுக்கான எச்சரிக்கை தொடர்பாக இதற்கு முந்தைய பதிவில் காணலாம்

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...