தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2019 டிசம்பர் 13 கடந்த 24 மணி நேர மழை நிலவரம் | இன்றைய வானிலை

13-12-2019 நேரம் காலை 10:00 மணி அடுத்த சில நிமிடங்களில் #புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியிருக்கும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம்.மேலும் முன்பு நாம் எதிர்பார்த்தது போல #காரைக்கால் மாவட்டத்தில் அதிகாலை முதலே அவ்வப்பொழுது சிறு சிறு மழை மேகங்கள் நுழைந்து விட்டு விட்டு #காரைக்கால் நகர பகுதி உட்பட ஆங்காங்கே மழை பதிவாகி வருவதையும் அறிய முடிகிறது.மேலும் முன்பு காரைக்கால் மாவட்டத்தை கடந்த மழை மேகங்கள் தற்சமயம் #நன்னிலம் ,#சன்ணாநல்லூர் ,#திருக்கணாபுரம் சுற்றுவட்டப் பகுதிகளில் மழையை பதிவு செய்து வருவதையும் அறிய முடிகிறது.மேலும் தஞ்சை மாவட்டம் #வடுவூர் ,#தாலயமங்களம் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன. இவை மேற்கு நோக்கியே நகரும்.

இன்று அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர் ,புதுச்சேரி ,நாகை ,காரைக்கால் ,திருவாரூர் ,தஞ்சை ,புதுக்கோட்டை ,அரியலூர் ,விழுப்புரம் மாவட்ட பகுதிகள் உட்பட வட கடலோர ,டெல்டா ,தென் கடலோர ,தென் உள் மற்றும் தென் மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் வலுவான மழையும் பதிவாகலாம்.#புதுச்சேரி - #சென்னை இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.விரிவான அடுத்த 24 மணி நேர மழை தகவல்களை பிற்பகலில் நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.

இன்று காலை 8:30 மணி வரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரம்
=======================
 புதுச்சேரி மாநிலம்
===============
காரைக்கால் (காரைக்கால் மாவட்டம்) - 11 மி.மீ
புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம்) - 4 மி.மீ

தமிழகம்
=========

பாபநாசம் (நெல்லை மாவட்டம்) -  17 மி.மீ

நாகப்பட்டினம் (நாகை மாவட்டம்) - 6 மி.மீ

பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம்) - 5 மி.மீ

மண்டபம் (ராமநாதபுரம் மாவட்டம்) -  2 மி.மீ

வேதாரண்யம் (நாகை மாவட்டம்) - 1 மி.மீ

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...