03-12-2019 நேரம் பிற்பகல் 1:55 மணி அடுத்த சில மணி நேரங்களில் தென் மேற்கு அரபிக்கடல் பகுதியில் #சோமாலியா வுக்கு கிழக்கே உருவாக உள்ளது #பவன் புயல் (#PAWAN_CYCLONE).மேலும் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் லட்சத்தீவுகளுக்கு வட - வட மேற்கே ஒரு தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது (well market low pressure area) .மீனவர்கள் அரபிக்கடல் பகுதிக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.இன்று காலை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு அழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) நிலவி வந்தது தற்சமயம் அது மேலும் தீவிரமடைந்து வருகிறது அடுத்த சில மணி நேரங்களில் அது தீவிரமடைந்து #பவன் (#PAWAN) புயலாக உருவெடுத்து பின்னர் சோமாலியாவின் கடலோர பகுதிகளை நோக்கி நகர முற்படலாம்.
மேலும் தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலைக் கொண்டு இருக்கும் அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேலும் வட மேற்கு திசையில் அடுத்த சில மணி நேரங்களில் நகர்ந்து ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கலாம்.
நிகழ் நேர தகவல்கள்
==================
சற்று முன்பு பதிவாகியிருக்கும் ராடார் படங்களின் படி #காரைக்கால் பகுதியை கடந்த வலுவான சிறிய மழை மேகங்கள் தற்சமயம் #திருவாரூர் மாவட்டம் #கூத்தனுர் ,#பேரளம் ,#சிறுப்புலியூர் ,#திருக்கனாபுரம் சுற்றுவட்டப் பகுதிகளில் பதிவாகி வருகின்றன அதே போல தஞ்சை மாவட்டம் #நாச்சியார்கோயில் ,#வடுவூர் ,#அம்மாப்பேட்டை சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன இவை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் #தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.மேலும் #மணப்பாறை ,#கலிங்கப்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளில் இருந்த மழை மேகங்கள் மேற்கு நோக்கி நகர்ந்து தற்சமயம் இடையப்பட்டி சுற்றுவட்டப் பகுதிகளில் பதிவாகி வருகிறது.
அடுத்த 24 மணி நேர வானிலை
======================
அடுத்த 24 மணி நேரத்தில் திருச்சி ,சேலம் ,தஞ்சை ,பெரம்பலூர் ,நாமக்கல் ,கரூர் ,புதுக்கோட்டை ,திண்டுக்கல் ,மதுரை ,சிவகங்கை ,ஈரோடு ,திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.மேலும் #கடலூர் மாவட்ட மேற்கு பகுதிகளிலும் #கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பதிவாகலாம் அதே போல #நீலகிரி மாவட்டம் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகளில் இன்றும் சில இடங்களில் வலுவான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இன்றும் நள்ளிரவ மற்றும் அதிகாலை நேரங்களில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் உட்பட தென் கடலோர மாவட்டங்களில் அங்கும் இங்குமாக சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேலும் தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் உட்பட தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம்.
0 comments:
கருத்துரையிடுக